பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

மொக்கல்லானன் I (கி.பி.497 -515)

கஸ்ஸபனுக்குப் பிறகு மொக்கல்லானன் அரசாண்டான். இவன், கஸ்ஸபனால் துரத்தப்பட்டுத் தமிழ் நாட்டுக்குப் போய் அடைக்கலம் புகுந்தான் என்பதை அறிந்தோம் "கஸ்ஸயனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் மொக்கல்லானன் என்னும் வீர மன்னன் நிகந்தர்களின் செய்தியறிந்து பன்னிரண்டு வீரர்களான நண்பர்களோடு ஜம்புத்தீவிலிருந்து தமிழ் நாட்டிலிருந்து" இங்கே (இலங்கைக்கு) வத்தான் என்று சூலவம்சம் கூறுகிறது.[1] நிகந்தர் என்பது இங்குக் களப்பிரரைக் குறிக்கிறது. நிகந்தர் என்றால் சமணர் அல்லது ஜைனர் என்று பொருள். களப்பிரர், ஜைனர் ஆகையினாலே அவர்களை நிகந்தர் என்று சூலவம்சம் கூறுகிறது. எனவே மொக்கல்லாளன் தமிழ் நாட்டிலிருந்தும் களப்பிர அரசரின் உதவி பெற்று இலங்கைக்குப் போனான் என்பது தெரிகிறது.

மொக்கல்லாளன் அரசனாளவுடனே தன்னுடைய தந்தையான தாதுசேனனைக் கொல்வதற்குக் கஸ்ஸபனோடு உதவியாக இருந்த ஆயிரம் பேரைக் கொன்றுவிட்டான். மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த பலரைப் பிடித்து அவர்களுடைய காதையும் மூக்கையும் அரிந்து அவர்களை நாடுகடத்தி விட்டான். தமிழ் தாட்டிலிருந்து இலங்கை மேல் போர் செய்யப் படையெடுத்து வருவார்கள் என்து அஞ்சி இவ்வரசன் இலங்கையின் மேற்குக் கடற்கரை யோரங்களில் ஆங்காங்கே பாதுகாப்புகளை அமைத்தான். மொக்கல்லானன் பதினெட்டு யாண்டு அரசாண்டான்.[2]

குமார தாதுசேனன் (கி.பி.515-524)

மொக்கல்லானன் இறந்த பிறகு அவனுடைய மகனான குமார தாதுசேனன் அரசாண்டான். இவனும் காளிதாசன் என்பவனும் தெருங்கிய நண்பர்கள், காளிதாசன் மொக்கல்லானனுடைய அமைச்சனுடைய மகன். குமார தாதுசேனன் ஒன்பது ஆண்டு அரசாண்டான்.[3] இவன் தன்னுடைய நண்பனான காளிதாசன் இறந்த போது அந்தத் துயரம் பொறுக்க முடியாமல் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர்விட்டான் என்பர்.

கீத்தி சேனன் (கி.பி.524)

பிறகு, குமார தாதுசேனனுடைய மகனான சுத்திசொன் அரசனானான். இவனுடைய ஆட்சிக்காலத்தில் 9-ம் மாதம் இவனுடைய தாய் மாமனான சிவன் என்பவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றி யரசாண்டான்.[4]

சிவன் (கி.பி.524)

தன்னுடைய மருமகனான கீத்திசேனனைக் கொன்று அரசனான சிவன் இருப்பதைந்தாம் நாளில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப்பட்டு


  1. சூலவம்சம் 39-ம் பரிசசேதம் 20
  2. Ibid 29-53
  3. சூலவம்சம் 4ம் பரிச்சேதம் 1-3
  4. சூலவம்சம், 41-ம் பரிசசேதம்4