பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

இலக்கிய நூல்கள் மனிதக்காதலைக் கூறுகின்றனவே யல்லாமல் தெய்வ மனிதக்காதலைக் கூறவில்லை. சைன பௌத்த மதத்தவர் நாயகநாயகி பக்திக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது போலவே சைன பௌத்தரல்லாத ஏனைய தமிழர்களும் இந்தப்புதிய நாயக. நாயகிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள். ஆகையால் இந்தக் கொள்கைக்கு ஆதாரமான நூல் வேண்டியிருந்தது. அந்த ஆதாரநூல்தான் 'இறையனார் அகப்பொருள்' என்னும் களவியல் நூல், (இந்த இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூலைப் பற்றி இந்நூலில் இணைப்பு 3-ல் காண்க)

பக்தி இயக்கமும் பேரின்பக்காதல் (நாயக நாயகி பாவம்) கொள்கையும் சைன பௌத்த மதங்களை வீழ்த்திச் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்குப் பேருதவியாக இருந்தன. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் சைவ வைணவ மதங்களை ஓங்கி வளரச் செய்யவும் சைன - பௌத்த மதங்களைத் தாழ்த்தொஉம் செய்ததற்கு முதற்காரணமாக இருந்தது பக்தி இயக்கத்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.