பக்கம்:கள்வர் குகை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பேசிக் கொண்டார்கள். அதெல்லாம் நம்பிக்குப் புரியவில்லை.. ஆகையால் அவர்கள். செயல் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்தான். நெடுநேரம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்து விட்டு, அந்த மங்கோலியர்களில் ஒருவன், தனியாக நின்ற பாறாங்கல்லின் அடியில் எதையோ அழுத்தினான். மற்றொரு ஆள் அதை மெதுவாகச் சாய்த்தான். பிறகு மூவரும் உள்ளே சென்றார்கள். உள்ளே என்ன செய்தார்களோ தெரியவில்லை. சிறிது நேரம் சென்றபிறகு மூவரும் வெளியில் வந்தார்கள். மங்கோலியர் இருவர் கையிலும் தங்கப் பாளங்கள் மின்னின. அவற்றை மடியில் கட்டிக்கொண்டனர். பிறகு எல்லோரும் நடந்தனர். தூரத்தில் ஒரு கால்வாய் இருந்தது. அதில் அப்பொழுது தண்ணீர் கிடையாது. அதில் இறங்கி அந்தக் கால்வாய் ஓடிய திசையில் நடந்து சென்றார்கள், நம்பி, திரும்பிப்போய்க் குதிரை மீது ஏறிக்கொண்டான். அந்தக் கால்வாய்க்குச் சிறிது தூரத்தில் அதையொட்டியவாறே குதிரையை நடத்திக்கொண்டு பறந்தான்.

அந்தக் கால்வாய் ஒரு ஆற்றங்கரையில் போய் முடிந்தது அந்த இடத்தில் ஒரு மரத்தடியில் மறைவாகக் குதிரையைக் கட்டிவிட்டு ஒரு மரத்தின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டான். கால்வாய் வழியாக நடந்து வந்த ஆட்கள் ஆற்றங்கரை வந்ததும் வணக்கம் கூறிக் கொண்டார்கள் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆள் கரை வழியாகவே மேற்கு நோக்கி நடந்தான். மற்ற இருவரும் அங்கு கட்டிவைத்திருந்த படகை அவிழ்த்துக் கொண்டு புறப்பட்டனர். படகு ஆற்றில் மேற்கு நோக்கி அதன் போக்கில் சென்றது. சிறிது தூரம் சென்றவுடன் அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/12&oldid=1054835" இலிருந்து மீள்விக்கப்பட்டது