பக்கம்:கள்வர் குகை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10

இருந்த ஒரு மங்கோலியன் நம்பி-யிருந்த மரத்தைச், சுட்டிக் காட்டி என்னவோ சொன்னான். அவனும் திரும்பிப் பார்த்து விட்டு ஏதோ பேசிக்கொண்டான். நம்பி அவர்கள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மங்கோலியர் இருவரும் தான் அவர்களைக் கவனித்ததைக் கண்டுகொண்டு விட்டார்கள் என்பதை நம்பி உணரவில்லை. பிறகு இறங்கிக் குதிரையைத் தமிழ் ஆசாமிபோன திசையில் தட்டிவிட்டான். வெகுதூரம் போயும் அவனால் ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. பிறகு மனம் சலித்தவனாக வீடு திரும்பினான். அடுத்த நாள் காலையில் எழுந்த உடன் குதிரைமீது ஏறிக்கொண்டு, வழக்கம்போல் அந்த மூன்று பேர் சந்திக்கும் இடத்திற்கு வந்தான். மரத்தின் மேல் ஏறிக் கீழ் நோக்கினான். அந்தத் தமிழ் ஆசாமிமட்டும் அங்கே நின்று கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவன் மலைக்குக் ழே மறைவதுபோல் தோன்றியது.

நம்பி மரத்தைவிட்டுக் கீழே இறங்கினான். மறைந்து மறைந்து அந்த இடத்திற்குப் போய் மரத்தின் பின் ஒளிந்து கொண்டு, நடப்பதைக் கவனித்தான். தமிழ் ஆசாமி ஒரு ஆளே, கீழே உள்ள ஒரு கல்லைக் காலால் அழுத்தி மேலே உள்ள பாறாங்கல்லை நிமிர்த்தி அந்த இடை வெளியை மூடினான். பிறகு அவன் அந்தக் கால்வாயை நோக்கி நடந்தான்.

அவன். சென்ற பிறகு தம்பி மெதுவாக வெளியில் வந்தான். சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.