பக்கம்:கள்வர் குகை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பாண்டியன். தன் முன் கோபத்திற்கு வருந்தி, நம்பியை விடுவித்து “நம்பி, என் முன் கோபத்தால் இப்படி நேர்ந்து விட்டது. இதை நீ மனதில் போட்டுக் கொள்ளாதே” என்றான். “அரசே. தீ அணைக்க வருபவனையும் சுடுகிறது. ஏற்ற வருபவனையும்தான் சுடுகிறது அதற்காக அதன்மேல் கோபங்கொள்ளலாமா?” என்றான். பாண்டியனுக்குச் சுருக்கென்றது.

பிறகு பாண்டியனும், வேடர் தலைவனும் 50 வீரர்களும், தம்பி வழி காட்ட அந்தக் குகையை நோக்கிச் சென்றார்கள், குகையின் அருகில் வந்தவுடன் எல்லோரும் மரங்களின் பின் மறைந்து கொண்டார்கள். நெடு நேரம் வரை யாருமே வரவில்லை. உண்மையில் அந்த மூன்று ஆசாமிகளும் வந்திருந்தார்கள், யாரும் குகைக்கு வருகிறார்களா என்று பார்ப்பதற்காக அவர்களும் ஒளிந்து கொண்டிருந்தார்கள். கடைசியாகப் பொறுமை இழந்து விட்ட நம்பி மரத்தைவிட்டு வெளியில் வந்து நேராகக் குகைச்கெதிரில் சென்று பாறையைப் புரட்டினான். அப்பொழுது திடீரென்று அந்த மூன்று பேரும் பாய்ந்து வந்து நம்பியைப் பிடித்துக் கொண்டார்கள். இதைக் கண்டவுடன், பாண்டியனும் வேடர் தலைவனும், வீரர்களும் மறைந்திருந்த மரங்களினின்றும் வெளிக்கிளம்பி அவர்கள் மூவரையும் சூழ்ந்து கொண்டார்கள். அந்த மூன்று ஆசாமிகளுக்கும் மனம் ‘திக்திக்’ என்று அடித்துக்கொண்டது. வீரர்கள் அந்த ஆசாமிகளைக் கைது செய்தார்கள். பாண்டியன் குகைக்குள் சென்று பார்த்தான். தன், நகரத்தில் களவு போன பொருள்கள், அரண்மனைப் பொருள்கள், இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/17&oldid=1055031" இலிருந்து மீள்விக்கப்பட்டது