பக்கம்:கள்வர் குகை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16


மங்கோலிய ஆசாமிகள் அந்த முறையைச் சொல்ல மறுத்து விட்டனர். செத்தாலும் சொல்ல மாட்டோம் என்று கூறி விட்டார்கள்.

நம்பி, இந்தத் துப்புத் துலக்கியத்திற்கு நன்றியாக அவனுக்கு அரண்மனைப் படையிலேயே ஒரு பெரிய வேலை கொடுத்தான் பாண்டியன். வேடர் தலைவன் உள்ளம் பூரித்துப் போனான். நம்பியும் மகிழ்ச்சியுடன், “நான் பிறந்த நாட்டுக்கும், என் அரசர்க்கும் என்னாலான நன்மைகளைச் செய்வேன்” என்றான்.

அன்று நம்பியும் பாண்டிய மன்னனும் பல்லக்கேறி ஊர்வலம் வந்தார்கள்.

மிகத் திறமையாகத் திருடியவர்களைக் கண்டுபிடித்துப் பொருளைத் திருப்பித் தந்த நம்பியை மக்கள் வாயார வாழ்த்தினார்கள். தனி ஆளாக நின்று, அந்தக் குகைக் கள்வர்களைப் பிடிக்க வழிகண்ட நம்பியை எல்லோரும் பாராட்டினார்கள்.

அன்று முதல் பாண்டிய நாட்டில் களவு அற்றுப் போய் விட்டது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

கள்வர் குகை.pdf

செந்தமிழ்ப் பதிப்பகம், புதுக்கோட்டை.