பக்கம்:கள்வர் குகை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

காடுகளைச் சுற்றுவான். அப்பொழுது கணக்கில்லாத மிருகங்களைக் கொன்று குவிப்பான். மலைகளின் மீது ஏறி இறங்குவது அவனுக்கொரு விளையாட்டு. நம்பி, வேடர் தலைவனுக்கு ஒரே மகனாகையால், அவன் விருப்பப்படி தனியாகச் சுற்ற விட்டிருந்தான். அவனை என்ன குற்றம் செய்தாலும் கண்டிக்கவே மாட்டான். அவ்வளவு உரிமையளித்திருந்தான். மற்ற வேடர்களும் அவ்ன் தங்கள் தலைவர் மகன் என்று அவன் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுவார்கள்.

சில சமயங்களில் அவன் புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மரத்திலிருந்தபடி வேடர்களுக்கு மத்தியில் குதிப்பான். அவர்கள் எங்கிருந்தோ புலி பாய்கிறது என்று எண்ணிப்பயந்து பதைபதைத்துச் சிதறி ஓடுவார்கள். உடனே புலித்தோலை நீக்கிவிட்டு வெளியில் வந்து சிரிப்பான். இப்படிப் பல வேடிக்கைகள் செய்துகொண்டே அவன் தன் வாழ்க்கையை இன்பமாகச் செலுத்தி வந்தான்.

ஒரு நாள் நம்பி, ஒரு மரத்தின் மேல் ஏறிப்பழம் பறித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கீழே ஒரு குதிரை நிற்பதைப் பார்த்தான். குதிரையில் வந்த ஆள் அதை மரத்தடியில் கட்டிவிட்டு எதற்காகவோ இறங்கி நடந்து கொண்டிருந்தான். நம்பி மரத்தை விட்டுக் கீழே இறங்கினான். குதிரையை அவிழ்த்து அதன் முதுகில் ஏறிக்கொண்டு கிளம்பினான். அது பாண்டிய மன்னனின் குதிரை. அவனுடைய படை வீரர்கள், சிறிது தூரத்தில் தங்கியிருந்தார்கள். எல்லோரும் காட்டில் வேட்டையாடுவதற்காக வந்திருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/7&oldid=1475176" இலிருந்து மீள்விக்கப்பட்டது