பக்கம்:கள்வர் குகை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

தார்கள். பாண்டியனுடைய குதிரை பஞ்சாய்ப் புறப்பதைக் கண்ட வீரர்கள், அரசன் தான் ஏதோ கொடிய மிருகத்தை விரட்டிச் செல்கிறான் என்று எண்ணி அந்தக் குதிரையைத் தொடர்ந்து தங்கள் குதிரைகளையும் தட்டி விட்டார்கள். தம்பியும் குதிரையும் சென்ற வழியில் பாண்டியன் படைவீரர். அனைவரும் பறந்து விட்டார்கள்.

குளத்தில் நீர் அருந்துவதற்காகச் சென்ற பாண்டியன் குதிரைகள் கிளம்பும் சத்தத்தைக் கேட்டுத் திரும்பி வந்தான். அங்கே தன் குதிரையையும், படை வீரர்களையும் காணவில்லை. எதற்காகத் தன்னை விட்டு அனைவரும் கிளம்பி விட்டார்கள் என்பதும், தன் குதிரையை யார் எதற்காகக் கொண்டு சென்றார்கள் என்பதும், அவனுக்குப் புரியவில்லை. கால்நடையாக ஊருக்குள் போவதற்கு அவனுடைய உயர் தன்மை இடங்கொடுக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல், வேடர் தலைவன் தங்கியிருந்த குடிசை நோக்கி தடந்தான்.

இதற்கிடையில், நம்பியை அரசனென்று நினைத்துப் பின் தொடர்ந்த வீரர்கள், அந்தக் குதிரையின் வேகத்தைப்பிடிக்க முடியாமல் பின் தங்கி விட்டார்கள். விரட்டிய ஆட்கள் நின்று விட்ட பிறகு நம்பி, வேறு வழியாகக் குதிரையைத் திருப்பித் தன் குடிசை நோக்கித் தட்டினான். வீரர்கள் எவ்வளவோ நேரம், ஓரிடத்தில் காத்திருந்தும், அரசன் திரும்பி வராததால் அடுத்த நாட் காலை நகர் நோக்கிக் கிளம்பி விட்டார்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_குகை.pdf/8&oldid=1475180" இலிருந்து மீள்விக்கப்பட்டது