பக்கம்:கள்வர் தலைவன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) கள்வர் தலைவன் 15 கடமை, பாலசூரியன் தன் பிதாவை கினேந்து வருந்தி வருந்திக் குன்றிப் போகின்ருன். எப்படியாவது தாங்கள் தயை கூர்ந்து எமக்கிவ்வுதவி செய்யவேண்டும். உம்மை யே நம்பிருக்கின்றேன். நான் உம்மை மிகவும் வேண்டிக் கொள்ளுகின்றேன். நான் உமக்கு மூத்தவளாகையால் உமது பாதத்தில் வீழ்ந்து வேண்டாத குறைதான். (முகத்தை முன்ருனயால் முடித் தேம்பி அழுகிருள்.) செளரி. அம்மணி வருந்தவேண்டாம். வருந்தவேண்டாம் நான் என்னல் ஆன மட்டும் பிதாவுக்குச் சொல்லிப்பார்த் தேன், அவர் ஒரே பிடிவாதமாயிருக்கின்ருர். ஆயினும் தாம் அதைரியப்பட வேண்டாம். நாளாவர்த்தியில் பிதாவினுடைய கோபம் தணியும் : அப்பொழுது நாம் சொல்லுவோமாகில் கேட்பார். இப்பொழுது சொல் வதிற் பயனில்லையென்று தோற்றுகிறதம்மணி. செளமா. அப்பா ! அதற்கு நான் எத்தனே காலம் கார்க்க வேண்டுமோ ! என் பிராணகாதரை விட்டுப்பிரிந்து நான் இங்கெப்படி உயிர் வாழ்ந்திருப்பது ? அவர் இப் பொழுது எங்கு உழல்கின் ருரோ ! என்ன சங்கடங்களை அனுபவிக்கிருரோ ! என்னுடன் கடைசி முறை சொல்லி விட்டும் போகவில்லேயே ராஜகுமாரா மாமா அவர்கள் முன்பிட்ட கட்டளையை மீட்டுக்கொள்ளாமற் போற்ை போகின்றது, எங்களேயேன் இவ்வரண்மனையை விட்டுப் போகக்கூடாது என்று காவலிலமைத்திருக்கின்ருர் ? காங்கள் என்ன தப்பிதம் செய்தோம் அவருக்கு ? அப்பா குலமகளைத் தன் கொழுனனிடமிருந்து இவ் வாறு பிரித்துவைப்பது உமக்கு நியாயமென்று தோற்று கின்றதா ? இதல்ை நமது குலத்திற்கு அபகீர்த்தி வரு மன்ருே ? அப்பா ! இதையாவது செய்யும். எப்படி யாவது மாமாவைக் கேட்டு காங்களிருவரும் இவ்வரண் யை விட்டு என் பிராணநாதரிருக்குமிடம் தேடிச்சென்று அவருடனிருக்க உத்திரவு கொடுக்கும்படியாகக் கேளும். இது எங்களுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்ததாகும். உமக்கு மிகவும் புண்ணியமுண்டு.-- செளரி. அம்மா அழவேண்டாம். இதற்கு எப்படியும் பிதா இசைவாரென்று நினேக்கிறேன். இதோ கான் பிதாவிடம் போய் பேசுகின்றேன். இப்பொழுது தமயன் இருக்கு மிடம் உமக்குத் தெரியுமா ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/19&oldid=779722" இலிருந்து மீள்விக்கப்பட்டது