பக்கம்:கள்வர் தலைவன்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*{} கள்வர் தலைவன் (அங்கம்-1 செளரி. அப்படியல்ல! நான் சொன்னபடி செய்-பலாயன என்ன உனது வலது கையில் ? ப. ஏதோ கேற்றைத்தினம் சாயங்கால முதல் இருந்திருந்து அங்கே ஒருவித வலிகாண்கின்றது. செளரி. அது ஒன்றுமில்லை நீ சீக்கிரம்போ. (பலாயணன் போகி ருன்) நாம் கொடுத்தது தன் சொரூபத்தைக் காட்ட வாரம்பித்து விட்டாற்போலிருக்கிறது அதிருக்கட்டும், இதென்ன பெரும் சங்கடம் ஏமாங்கதன் தப்பித்துக் கொண்டானமே! இனி நான் மிகவும் ஜாக்கிரதையா யிருக்கவேண்டும். இப்பொழுது கான் கொஞ்சம் அஜாக்கிரதையா யிருப்பேஞயின் எல்லாம் கெட்டுப் போம். ஏமாங்கதன் எப்படியும் தன்னுடைய பெண்டு பிள்ளைகளைப் பெறவிரும்புவான். அவர்கள் அவனிடம் போய்ச்சேர்ந்து விடுவார்களாயின் பிறகு நமக்குக் கஷ் டம். ஆதலால் செளமாவினியையும் பாலசூரியனேயும் சிறையிலிட்டு வைக்கும்படி பிதாவுக்குப் போதிக்க அனுசூயாதேவியை எவவேண்டும். அந்த மட்டும் எனது மனதுக்கிசைந்த தாயார் கிடைத்தது என் பாக்கியமே ! நான் இனி காலத்தை விணிற்கழிக்கலாகாது. ஒவ்வொரு கடினமும் எனக்குபயோகப்படும். (போகிருன்.) காட்சி முடிகிறது. جامد اسمع عربه مستعمجمچچمهمی xes மூன்ருவது காட்சி இடம்:- ராஜ வீதியில் ஒரு வீடு. வீதியில் ஜெயபாலன் மாறுவேடம் பூண்டு வருகிருன், ஜெ. (தனக்குள் இவ் வீதியைக் காணுங்கால் என் மனதில் என்னென்ன ஞாபகங்கள் வருகின்றன ; ஹா (பெரு மூச்சு விடுகிருன் நாம் வந்த வேலையைப் பார்ப்ப்ோம்'; அவைகளையெல்லாம் பற்றி இப்பொழுது யோசித்துப் பயனென்ன ? அந்த புத்தி அப்பொழுதே இருக்கவேண் டும்-இப்படியாவது இவனேக் கைவசப்படுத்த வேண் டும். ஆயினும் இவன் செளரியகுமாரனிடம் மிகவும் அன்யோன்யமாயிருக்கின்றன். அவனுடைய துர்ச் செய்கைகள் இவனுக்குத் தெரிந்திருந்தாலுமிருக்கும். இவனே நம்முடைய வசப்படுத்துவதெப்படி?-ஆயினும் பார்ப்போம் - பலாயனன் வீட்டு வாயிலெதிரில் வந்து நிற்கிருன்) -