பக்கம்:கள்வர் தலைவன்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 isr. 6li, கள்வர் தலைவன் (அங்கம்-1 சங்கன் வர்த்திகன் வேடந்தரித்து மற்ருெரு பக்கம் வருகிருன். என் சொற்படிகேட்டிருந்தால் இந்த விடங்கன் இக் கள் வர் கையில் ஒருக்காலும்கப்பட்டிருக்கமாட்டான். ஆயி னும் அவர்கள் அவனைக்கொன்று விடாமலிருக்கும் பட் சத்தில் ஒருவிதத்தில் இது அனுகூலமே. நேற்றைத் தினம் விடங்கனுடன் பேசிக்கொண்டிருந்த கள்வன் கூறிய அடயாளங்களில்ை இப்பொழுது ஏமாங்கதன் இவர்களுக்குத் தலைவனாக இருக்கின்ருன் என்று கம்ப வேண்டியதாயிருக்கின்றது. இப்பொழுது கான் ஏமாங் கதன் இருக்குமிடமறிந்து நேராகச்சென்று கொல்வ தென்ருல் அசாத்தியமானகாரியம். இக்கள்வர்களும் நம்மைவிடமாட்டார்கள். ஆகவே கான் இவர்கள் கையில் அகப்பட்டு இவர்களுடன் சேர்ந்து கொண்டாற்போல் கடித்து உண்மையை அறிந்து சமயம் பார்த்து நமது வேலையை முடித்துக் கொண்டு திரும்பவேண்டும். பகை யாளியின் குடியை உறவாடியே கெடுக்கவேண்டும். அதுவுமன்றி இப்படிச் செய்வதனால் விடங்கனுடைய சமாசாரமும் நமக்குத் தெரியவரும்-உம் ! நமது பின் பாக இருவர் தொடர்கின்ருர்கள். யுக்திசாலிகள் தான். துாண்டிவிட்டால் மீன் அகப்படுகின்றது (தன்பையிலிருந்து ஒரு பதக்கத்தை யெடுத்துமெல்ல கழுத்திலணிந்து கொள்ளு கிருன். ஐயோ ! இந்தக்காட்டில் வந்து அகப்பட்டுக் கொண்டோமே ! என்ன செய்கிறது? இங்கு ஒரு துணையையும் காணுேமே (பயந்தவனப் போல்பாவிக்கிருன்) கான்குபுறமும் திடீரென்று வந்து கள்வர்கள் சுற்றிக்கொள்கிருர்கள். கில் அங்கே! உன்கையிலிருக்கின்றதெல்லாம் கொடுத்து விடுகின்ருயா? உதைவேண்டுமா! உதைச்சா தவிர கொடுக்கமாட்டாண்ட அவன், உதைங்கடா உதைங்கடா ! ஐ ஐயோ! அப்பர் ! என்னிட்ம் உள்ளதை யெல்லாம் கொடுத்து விடுகின்றேன் என்ன அடியாதேயுங்கள் அடியாதேயுங்கள் (அவனிட முள்ளதையெல்லாம் கவர் கின்ருர்கள்) ஐயோ! அப்பொழுதே நினைத்தேன் கான் புறப்படும்பொழுதே ஒரு கள்பான எதிரில் வந்தது. அடே அத்தெ முன்னேகேளுங்கடா ஒதைச்சி, எங்கே அந்த கள்ளுப்பானே?