பக்கம்:கள்வர் தலைவன்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§§ கள்வர் தல்வன் (அங்கம்-2 வன் இருந்தானே தெரியுமோ ?-அடடே இவன் ஊமையும் செவிடுமென்பதை மறந்தேன் !-எழுதியே கேட்கவேண்டும்-(ஒர் ஒலையில் எழுதி அதனை ஏமாங்கதனி டம் வணக்கத்துடன் கொடுத்து அவன் முன் முழந்தாளிட்டு நிற்க, ஏமாங்கதன் திக்பிரமையைக் கொண்டவனுய் ஒலையை உற்றுப்பார்த்த வண்ணமிருக்கின்ருன்) சுவாமி எப்படியா வது தாம் இதைக் கிருபை செய்யவேண்டும். என்னு டைய ராஜ்யத்தில் பாதி தருகின்றேன்-என்ன சும்மா இருக்கின்ருர் ? நான் எழுதியது அர்த்தமாகவில்லையோ ? (எழுந்திருக்கிருன். எழுந்தவுடன் எதிரில் கதவின் பக்கத்தில் ஜெயபாலன் உருவைக்கண்டு திடுக்கிட்டு நின்று விடுகிறன். ஜெயபாலன் திடீரென்று மறைகிருன். உடனே செளரிய குமாரன் சேவகர்களே! சேவகர்களே ! என்று கூவிக் கொண்டு அறையை விட்டு வெளியே ஒடுகிறன். காவல் மணிக ளெல்லாம் அரண்மனை யெங்கு மடிக்கப்படுகின்றன. இச் சமயத்தில் ஏமாங்கதன் செளரிய குமாரனத் தன்முன் காணுனய் மெல்ல எழுந்து ராஜ முத்திரை யிருக்குமிடம் சென்று, தான் கொணர்ந்த இரண்டு ஒலைகளிலும் அதைப் பதிப்பித்துக் கொண்டு அறையை விட்டுச் செல்கிருன் ஒருபுறமாக.) சுசங்கதை மற்ருெருபுறமாக வருகிருள். இதென்ன ! மகாராஜா இறந்துகிடக்குஞ் சமயத்தில் அரண்மனை யெல்லாம் இவ்வாறு பெருங்கூச்சலாயிருக் கின்றது ! செளரிய குமாரனேக் கேட்கலாமென்று வந் தால் அவனையும் காணுேம். வந்தவுடன் கேட்போம். ஐயோ! பிதா திடீரென்று இறந்தார். இதுவும் நமது அண்ணன் செயலோ? சீ! அப்படி எண்ணவும் என் மனம் எழவில்லை. அப்படியிருக்காதென்று கோருகின் றேன்-ஆயினும் !-இப்பொழுது அவனுடன் ஏமாங்க தனே இனி வரவழைத்துப் பட்டங்கட்டென்று சொல் லிப் பார்க்கின்றேன், அதற்கு என்னசொல்லுகின்ருனே பார்ப்போம், அதில் எல்லாம் வெளியாகின்றது. என்ன் செளரியகுமாரனே இன்னும் காணுேம்?-ஆ மனிதர் வாழ்வு எவ்வளவு அற்பமானது கேற்றிருந்தார் பிதா இன்றைக்கெங்கே? நான் அவருக்காக இப்பொழுது அழுகின்றேன். அவர் எத்தனே பெயரிறந்ததற்காக அழுதாரோ ? எத்தனே பெயூர் எனக்காக அழப் போகின்ருர்களோ ஒருநாள் இப்படிச்சென்று கொன் டிருக்கின்றது. உலகம் ! - - -