பக்கம்:கள்வர் தலைவன்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4? கள்வர் தலைவன் (அங்கம்-2 கடந்த விர்த்தாந்தத்தைக் கூறும். உமக்கு உடம்பு முத வியனவெல்லாம் முன்போல வாகிறவரையில் தொந்த ரவு கொடுக்கலாகா தென்றிருந்தேன். ஏ. சொல்லுகின்றேன். நீ போனதும் நான் உள்ளே செல்ல, என் எதிரில் பலாயனன் வரவே உன்கிருபத்தை அவனி டம் கொடுத்தேன்; அதைப் பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியம் கொண்டவனாய் சற்றுநேரம் அங்கிருபத்தை யும் என்னேயும் மாறி மாறி உற்றுப் பார்த்துவிட்டு, என்னேக் கையில்ை சைகைசெய்து உட்கார்ச் செய்து உள்ளே சென்று உடுத்திக்கொண்டு சரேலென்று வெளி யிற்சென்ருன், ஒரு நாழிகை பொறுத்து திரும்பிவந்து அரண்மனையில் செளரியகுமாரன் என்னைக்கான விருப்ப முற்றிருக்கின்றதாகவும் தான் என்னை உடனே அங்கு அழைத்துக் கொண்டு போகின்றதாகவும் எனக்கு ஓர் ஓலேயில் எழுதித் தெரிவித்தான். உடனே எனக்கு உண் டான ஆச்சரியம் கொஞ்சமன்று. பேசவேண்டு மென்று வாயெடுத்தால் பேச வரவில்லை. என்ன செய்வது? ஆயி னும் உன் வார்த்தையில் உறுதியான கம்பிக்கை வைத்து அவனுடன் சென்றேன். இரவு பன்னிரண்டு மணியிருக் கும் நள்ளிருள், என்னே அரண்மனைக்குள் அழைத்துச் சென்று செளரியகுமாரனுடைய அறைக்கு வெளியே விட்டு கையால் ஜாடைசெய்து போய்விட்டான். நான் கொஞ்சநேரம் யோசித்து தர்மமே ஜெயமென்று உள்ளே சென்றேன். அங்கே செளரியகுமாரனைக் கண் டதும் கோபத்திலுைம் வருத்தத்திலுைம் என் மெய் யெல்லாம் விதிர் விதிர்த்தது. அவன் என்னை மிகவும் உபசரணையுடன் உட்காரச்செய்து வாயால் என்னவோ கேட்டான் எனக்கொன்றும் கேட்காமற் போகவே நான் மெளனமாயிருந்தேன். பிறகு ஒர் ஒலயில் எழுதி என் கையிற் கொடுத்தான். அப்பா அதில் எழுதியிருக் ததை நான் என்னென்று சொல்வேன்! நீ அவனைப் பற்றி கூறியதவ்வளவும் உண்மைதான் சந்தேகமில்லை, நான் பிரமாணம் செய்வேன் ! அதைப் பார்த்தவுடன் என் அருகில் முழங்தாளிட்டுக்கொண்டிருக்கும்படியான அவனே ஒரே குத்தாய் குத்திவிடலாமா என் கட்டாரி யால் என்று ஆடங்காக் கோபம் பிறந்தது; ஆயினும் நான் என்ன செய்வேன். ! என் உடைவாள் முதலிய ஆயுதங்களை யெல்லாம் நீ வாங்கிக் கொண்டாயே, ஜெ. என்ன எழுதியிருந்தது அவ்வோலயில் எங்கே அது: