பக்கம்:கள்வர் தலைவன்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


部尊 கள்வர் தலைவன் (அங்கம்-2 பா. அப்பா அந்தமட்டும் கனவுதான் ஈசனே இதுவும் உம்முடைய சோதனையோ எல்லாம் உணதருள்! இக் கனவு மெய்க்குமாயின் ஏழையேன் என்செய்வேன்? தாம் தம்முடைய திருப்பாதத்தால் உதைத்த போதிலும் நாயேன் அப்பாதத்தையே கதியாகப்பற்றவேண்டும்! எல்லாமுமதருளே ! செள, கண்ணே ! பாலசூரியா விழித்துக்கொண்டாயா ? பா. ஆம் அம்மா, நான் உள்ளே வரலாமா ? செள, வரலாம் கண்ணே. (பாலசூரியன் திரையைத்தள்ளிக் கொண்டு செளமாலினியிடம் போகிருன்.) பா. அம்மா, உங்களுக்கு உடம்பென்னமாயிருக்கின்றது ? செள இருக்கின்றது : கண்ணே என்ன உனக்கு இத்தனை நாள் இருந்த முகமலர்ச்சி இல்லே, என்ன சமாசாரம்? பா. ஒன்றுமில்லை அம்மணி. செள. இல்லை கண்ணே ! என்னிடம் சொல்ல உனக்கென்ன? என்ன வாடியிருக்கின்ருய் ! பா. ஒன்றுமில்லை அம்மா, சற்றுமுன்பாக நான் மெய்ம் மறந்து உறங்கினேன். அப்பொழுது நான் ஒரு கனவு கண்டேன், அது சற்று மனசஞ்சலத்தை புண்டுபண் ணிற்று வேருென்றுமில்லை. - - செள, என்ன கனவு ? பா. நான் ஒரு மலையின்மீது கின்றுகொண்டு கீழ்ப்பிரதேசங் களின் செழுமையையும் அழகையும் பார்த்து சந்தோஷித் துக்கொண்டிருப்பது போலவும், உடனே திடீரென்று ஒரு பெரும் இருள் என்னை சூழ்ந்துகொண்டது போல வும் கனவுகண்டேன். இது ஒருவேளை இனிவரப் போகின்ற ஏதாவது ஒருகெடுதிக்கு அறிகுறியாயிருக்கின் றதோ என்னவோ வென்று மனதிற்பட்டது. வேருென் றுமில்லை;--அம்மா ! என்ன கண்ணிர் விடுகின்றீர்கள் ? சென. அடா ! என் கண்ணே ! இதுவரையில் இந்தச் சிறைப் பட்டது முதல் நீதேறுதல் சொல்ல நான் என் வருத்தங் களை யெல்லாம் பொறுத்து வந்தேன். இது வன்ரயில் நீ வருந்தாதிருந்ததைப் பார்த்து நானும் தைரியங் கொண்டிருந்தேன். இப்பொழுது ேேயவருந்துகின்ருயே நான் என்ன செய்வது ! - பா. அம்மா, அப்படி எனக்கொன்றும் நேராதென்றே நினைக் இன்றேன். இல்லே ஆப்படி ஒருதால் நேரிட்டாலும் ஈச ஒெருவனிருக்கின்றன். நீர் என் துயருறுஆேண்டும் !