பக்கம்:கள்வர் தலைவன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கள்வர் தலைவன் (அங்கம்-1 இனி சுவாமிதான் தேறுதல் சொல்லவேண்டும் எனக்கு விடையளியும். செள. கண்மணி ! இப்படியும் இருந்ததா உன் விதி உல காளக் கண்டு நான் களிக்கலாமென்றிருந்தேனே, இப் பொழுது அந்தகய்ைக் கிடப்பதை எப்படி கண்டு என் மனம் தரிக்குமடா என்மகனே! பா. அம்மா ! யார் விதி யாரைவிட்டது நீர் வருந்தி என்ன பயன் ? அவரவர்கள் வந்த வழி அவரவர்கள் செல்ல வேண்டுமல்லவா ? இனி என்ன செய்யலாம் ? செள. அடா, என் வீரச்சிங்கமே ! உன் மதிபோன்ற முகத் தைப் பார்த்தன்ருே உன் பிதாவைவிட்டுப் பிரிந்தபின் உயிர் வாழ்ந்து வந்தேன். இப்பொழுது உன் முகத்தில் கண்கள் போய் நீ அந்தகன யிருப்பதைப்பார்த்து நான் எப்படி உயிர்வாழ்வேன்! இக்கதி அனுபவிப்பதற்கோ என்டாவி வயிற்றிலுதித்தாய் ! - பா. அம்மா! என் ஊனக்கண்ணேத்தானே கெடுக்கப்போகின் முர்கள்? என் ஞானக்கண்ணே அவிக்க இவர்களால் முடியுமோ! அதிருக்குமளவும் எனக்கென்னகுறை? அம் மன்னி, நீர் வருந்தி என் மனேதிடத்தைக் கலக்காதீர் ! செள அடாபால்கா ! உனக்குப் பதிலாக என்னுடைய கண் களே எடுத்துக்கொள்ள மாட்டார்களா ? என்னுயிரை உனது கண்களுக்குப் பதிலாகக் கொடுக்கின்றேனே! இப்பாபிகள் ஏற்றுக்கொள்ளாரோ ? செளரி. அடே சேவகா என்ன காலதாமதம் ? சே. ராஜகுமாரா, வாரும் சிக்கிரம் நேரமாய் விட்டது. பா. அம்மணி, கான் என்ன உமக்குத் தேருதல் சொல்லப் போகின்றேன்? உமது மனதை நீரே தேற்றிக்கொள்ளும், எல்லாம் ஈசன் செயல் எல்லாவற்றிற்கும் அவர் ஒருவர் இருக்கின்ருர், அம்மா ! என்ன்ே சந்தோஷமர்ய்ப் போய்வா என்று விடையளியும். செள. கண்ணே கண்ணே உனது கண்களே அழிக்க இப் பாதகர்கள் உன்னேக் கொண்டுபோகும் பொழுது கான் எப்படிச் சந்தோஷமாய் போய்வாளன்று உனக்கு விடை யளிப்பேன். உன்னைப்பெற்ற என்வயிறு எரிகின்றதே ! சே, வாருமையா சீக்கிரம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/58&oldid=779764" இலிருந்து மீள்விக்கப்பட்டது