பக்கம்:கள்வர் தலைவன்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கர்ட்சி-4) கள்வர் தலைவன் $5 பா. என்னேப்பெற்ற தாயே, நான் போய்வருகின்றேன். என் பாவிக் கண்களினல் உமது திருமேனியை இவ்வுலகில் கடைசிமுறைக் காண்கின்றேன். கான் கொடுத்துவைத் தது இவ்வளவுதான் (காலில் வீழ்ந்து கதறி அழுகின்ருன்.) செள (கெட்டியாயவனைக் கட்டியனைத்துக் கொண்டு) கண்ணே! கண்னே! நான் உன்னே விடேன்! விடேன். ! என்னேக் கொன்றுவிட்டு இப்பாதகர்கள் உன்னே என்கையினின் றும் இழுத்துக்கொண்டு போகட்டும்! செள. அடே! இழுத்துக்கொண்டு வாருங்களடா அவனே நீங்களும் என்ன அங்கே கின்று அழுதுகொண்டிருக்கின் நீர்கள்? செள. கான் விடேன் என்பாலனே! அடாபாதக ராஜகுமாரா! என்னைக் கொன்றுவிட்டு என் பிள்ளையை இழுத்துக் கொண்டு போகச்சொல் செளரி. அடே! என்ன, இழுத்துக்கொண்டுவருகின்றீர்களா என்ன ! செள, அடா! பாதகா! உனக்கு நான் உங்கள் குலப்பெண் ணென்று சற்றேனும் மானமில்லாமற் போய் விட்டதா ! என்னைத்திண்டியா பாலசூரியனே இழுத்துக்கொண்டு வரும்படி கட்டளையிடுகின்ருய்? செளரி. அடே கழுதைகளா! நான் சொன்னபடி செய்கின் lர்களா என்ன ? (சேவகர்கள் பாலசூரியனருகிற்செல் கின்றனர்) - - பா. அம்மா, சிற்றப்பனுக்குத் தான் மான மில்லாமற் போனலும் எனக்கு இருக்கின்றது. என் உயிரிருக்குமள வும் ஒரு அன்னியன் உம்மைத்தீண்டநான் பார்ப்பேனே? எனக்கு விடையளியும், நான்வருகின்றேன். என்னை ஈன். றெடுத்ததாயே ! உமது திருமேனியை இவ்வுலகத்தில் கடைசி முறை நான் இப்பொழுது கண்டேன், இனி மறு உலகத்தில் என் கண்களால் காண்பேன் (செளமாலினி மூர்ச்சையாகின்ருள்.)ஈசனே எல்லாம் உம்முடைய கருணை, சேவகர்கள். வாருமையா நேரமாய்விட்டது (வெளியே அழைத்து வருகிருர்கள்.) செளரி. அடே இப்பொழுதாவது சொல்கின்ருயா ? பர். சொல்கின்றேன். சிற்றப்பா பயப்படாதே என்கண் களால் உன் உருவை நீ நரகத்தில் கிடக்கும்பொழுது சீக் கிரம் காண்பேன், பயப்படாதே !