பக்கம்:கள்வர் தலைவன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 கள்வர் தலைவன் (அங்கம்-2 செளரி. அடே இவனே உடனே இழுத்துக்கொண்டு போய் காய்ச்சி இருக்கும் இருப்புச்ச்ல்ாகைகளினல் இவனது கண்களைக் குத்திவிட்டு, பிறகு சீக்கிரம் இங்கே அழைத்து வாருங்கள் (அப்புறம் என்ன் சொல்லுகின்ருனே பார்ப் போம் ! பா. ஈசனே எல்லாம் உனது கருணை (சேவகர்கள் அழைத்துச் செல்கின்றனர்) - செளரி. என்ன மன உறுதி ! இப்பொழுது பாடிக்கொண்டு போகின்ருன். இரத்தம் தேகமெல்லாம் படிந்த ஒரு தாதன் ஓடிவருகிருன். அடே என்னடா இது ? - து. மகாராஜா ! உங்களுடைய உத்திரவின்படி காலசேன ராஜன் முதலியோருடைய சைனியங்களுடன் நமது சேனதிபதி போர் புரிந்து அவர்களே முறியடித்து விட்ட தில்ை இருதிறத்திலும் அனேகர் மாண்டார்கள். செளரி. என்ன ! காலசேனனுடன் சித்திராயுதன் போர் புரிவதாவது ! - து. அதுவுமன்றி யுத்தம் நடந்து கொண்டிருக்குஞ் சம யத்தில் கமது பாசறையில் யாரோ அனேகர் கள்வர் வந்து நமதாயுதங்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றிருக்கிரு.ர்கள். இவ்விஷயத்தையெல்லாம் தங்க ளுக்குச் சீக்கிரம் கூறும்படி என்னைத் துரத்தினர். செளரி. இதென்ன சமாச்சாரம் சித்ராயுதளுவது நமது துணையரசர்களுடனே போர் புரிந்து அவர்களை முறி யடிப்பதாவது! அடே! வா இப்படி ! (அவனே அழைத்துக் கொண்டு விரைவிற் போகிருன்). - காட்சி முடிகிறது. ஐந்தாவது காட்சி - இடம்-அரண்மனையில் ஒர் அறை. செளரியகுமாரனும் பாலாயணனும் வருகிருர்கள். செளரி. பார்த்தாயா பாலாயன இங்கிருபத்தை கான்தான், காலசேனன் முதலிய நமக்குதவியாயுள்ள அரசர்கள் நமக்கு விரோதிகளாய் விட்டார் களென்றும் அவர்களு டன் அந்தட்சணமே போர் புரிந்து அவர்கள் சைனியங் களே அடியோடழிக்க வேண்டுமென்றும், கட்டளையிட்ட தாகக்கூறி அதற்கு அத்தாட்சியாக நமது இராஜ்ய முத்திரையிட்ட_இந்நிருபத்தை சித்ராயுதன் அனுப்பி யிருக்கின்ருன். இங்கிருபத்தில் அவன் சொன்னபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/60&oldid=779767" இலிருந்து மீள்விக்கப்பட்டது