பக்கம்:கள்வர் தலைவன்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்சி-2) கள்வர் தலைவன் 69 ஜெ. (மெல்லியகுரல்ாய்) அடே, எங்கே அந்த உடும்பு கட்டின கயிறு? (ஒருகள்வன் அதைக்கொடுக்கின்றன். ஜெயபாலன் அதை வீசி எறிகின்ருன் சிறைச்சாலையின்மீது) அடே, ஏறுசப்தம்செய்யாதே (ஒருகள்வன் ஏறிப்போய் நூலேணி ஒன்றைக்கட்டி அவ்விடமிருந்து கீழேவிடுகின்றன்.) அரசே, சீக்கிரம்போய் முதலில் உம்முடைய மனைவியை அழைத்துவாரும் ; ஜாக்கிரதை சீக்கிரம், சப்தமே و تي ITسساسة 5 (ஏமாங்கதன் துர்லேணிபற்றி ஏறிச் செல்கின்ருன்.) செள (மேலிருந்து) பிராணநாதா பிராணகாதா!ஜெ. சீக்கிரம் 1 சீக்கிரம் சப்தம்வேண்டாம். (ஏமாங்கதன் செளமாலினியை அழைத்து வருகிருன் நூலேணி வழியாக.) ஜெ. அரசே, எவ்வளவுநேரம்? காலமாய்விட்டதே நீர் உம் முடைய மன்ேவியை அழைத்துக்கொண்டு சுரங்கத்தின் வழியாக முன்புபோம். நான் போய் பாலசூரியனை அழைத்து வருகின்றேன். செள. பிராணகாதா பர்லசூரியனையும் அழைத்துவாரும். அவனேவிட்டுவிட்டு நான் மாத்திரம் எப்படிப் போவேன்? அவன் அந்தகனுயிற்றெ! ஜெ. அரசே! நீர்போம், சீக்கிரம் நானழைத்துவருகின்றேன்! நேரமாய்விட்டது, யாராவது பார்த்துவிட்டால் பிறகு அபாயம் !செள. அவன் வந்தாலொழிய நான்போகமாட்டேன். அவனே விட்டுப் போக எனக்கெப்படி மனம் துணியும் ஐயா ! ஜெ. ஐயனே பெண்புத்தியை கேளாதீர் போம்! இறங்கும்! அதோ! (தாரையின் சப்தம் கேட்கின்றது) யாரோவருகிருர் கள்! இறங்கும் சீக்கிரம் இறங்கும் (ஏமாங்கதன் சுரங்கத் தின் வாயிலில் குதிக்கிருன். செளமாலினி தன்கைக் குழந்தையை மார்போடனத்துக்கொண்டு சுரங்கத்தில் இறங்கப்போகும்சமயத் தில், எதிர் மதில் சுவரினின்றும் ஒர் சேவகன் அம்பை எய்ய அவ் வம்பு குழந்தையை ஊடுருவிச் ச்ெளமாலினியின் மார்பைத்துளைக் கின்றது. செளமாலினி பிராணநாதர்! என்று கூச்சலிட்டுக் கொண்டு ஏமாங்கதன் கரத்தில் வீழ்கின்ருள்.) ۳۰۰۰۰ ۰یر ஜெ. அடே! மண்ணேமூடிவிடுங்கள் இதன் பேரில் நில்லாதீர்! தப்பித்துக்கொள்ளுங்கள் ! (சுரங்கத்தில் குதித்து மூடிக் கொள்ளுகின்றன். கள்வர்கள் அதன்மேல் மண்ணே மூடிவிட்டு நான்குபுறமாய் ஓடிவிடுகின்ருர்கள். அரண்மனையில் ஆராய்ச்சி மணி அடிக்கின்றது.) - - -