பக்கம்:கள்வர் தலைவன்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


76. சே. கள்வர் தலைவன் (அங்கம்-3 கண்ணும்போய் நான் இனி இவ்வுலகத்தில் இருந்தென்ன பயன் ஈசனே ! இனி நான் உமது திருவடிகளிற் சேர வேண்டியதே சுவாமி தம்முடைய திருவுள்ளம்இப்படி இருந்ததோ ? என்னே அனுதையுமாக்கிக் கபோதியுமாக் கியதும் போதாதென்று இவ்வாறு இறக்கவும் திருவுளத் திலெண்ணினிரோ ? தமது சித்தத்திற்கு மாறுஉளதோ? 15ான் என்ன சொல்லப் போகின்றேன் ? இது உமக்குச் சரியானதாயின் எனக்கும் சந்தோஷமே-ஆயினும் ! நான் இவ்வாறு தண்டிக்கப் படுவதற்கு என்ன குற்றஞ் செய்தேன் தமது திருவுள்ள மறியநான் பிறந்தது முதல் ஒரு குற்றமும் செய்யவில்லை முன்சென்மத்திற் செய்த தீவினையின் பயனே இப்பொழுது வந்து மூண் டது? ஆயினும் நாயேனுக்குத்தாம் மனமிரங்கி யிருக்க லாகாதா ? என்னே ராஜகுமாரகைப் பிறப்பித்து, கல்ல ஸ்திதியில் வைத்து, பிறகு திடீரென்று தங்தையை யிழக் கும்படிச் செய்ததுமன்றி, சிறைச்சாலையிலிட்டுப் பின் தாயையுமிழக்கச் செய்து, இரண்டு கண்களும் போக, அைைதயுமாக்கியதுமன்றி முடிவில் என்னை இப்பாதகர் கள் தூக்கிவிடவும் விதித்தீர் ! என் மனஉறுதியைப் பரி சோதித்தற்பொருட்டோ? சுவாமி இனி இன்னும்என்ன செய்யப்போகின்றீர் ? ஐயனே தமது திருவுள்ளத்தின் முன் நாயேன் எவ்வளவு ? உலகப்பற்றை ஏன் சிறிது வைத்திருக்கின்ருய், அதையும் விட்டு விடென்று என்னே இக்கோலங்காட்டினிரோ ? ஐயனே, என்தாய் என்கின்ற அந்தப்பற்றையும் விட்டேன். இனிஎன்னே நீர் ஆட் கொள்ளேனென்ருல் விடுவேன ? ஐயனே நான் தளர்ந்தேன், என்னே இனித் தாங்குவது உம்முடைய கடமை. இனி எனக்கு இம்மானிடப் பிறவி வராவண் ணம் என்னைக்காப்பாற்றும் ஈசனே ! உமது திரு வடியைச் சிக்கெனப்பிடித்தேன். இனி என் இனக்கைவிட் உம்மால் முடியாது. ஈசனே ஜகதீசா ! எல்லாமும தருள் ! வா! வா! சீக்கிரம் கேரமாய்விட்டது. (அழைத்துப்போகின் றனர்): ( பாலகுரியன் தோத் திரப் பாடல்கள் பாடிக்கொண்டே போகிமூன்.) காட்சி முடிகிறது.