பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமு

போன்ஸ்ட்!” மதியம் 12.00:12-30க்குள் ஒரு பீட்”

தபால்காரன் வயதானவன். மரியாதையானவன், சைகிள்.

பிறகு மாலை 4|15-5:30க்குள் ஒரு பீட்.

ஒரு இளைஞன். கால் நடை. தலை மயிர் எத்தனை கட்டை முன் நெற்றியில் சரிந்து சரிந்து ஒரு அடை விழுகையில், அதைப் பின் தள்ளுவதற்காக, தலையை உதறிக் கொள்வது அவனுக்கு இரண்டாம் இயல்பாகப் போய் விட்டது. கொஞ்சம் ஒட்டி வெட்டினால் இந்த அசெளகரியம் இருக்காது. அசெளகரியம் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். அதுவே ஸ்டைலாக இருந் தாலோ? கேட்க நான் யார்?

( ‘கேட்டு, விலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் அப்பாவுக்கு இருக்க முடியாதே’

மேதாவி நெ. 2.

பேசப் புதிதாகப் பையன்கள் பழக்குகிறான்கள். பேசவா, இவர்களுடன் நமக்கென்ன என்று வாய டைத்துப் போகவா? )

மு ைற ப் படி தபால் நேரங்கள் எத்தனை, எப்பெப்போ?

12 to 12-30;

4 to .5-30