பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ G 7

“என்னடா விளையாடறியா, என்கிட்ட கையடிச்சு ourtiggluur, get out!”

முத்தையாவின் முரண்டல் உண்மையாகவே நன்றா யில்லை. ஏன் சமயம் போது இல்லாமல் அசிங்கமா நடந்து கொள்கிறான்? -

(முத்தையா பிறகு சொன்னான். சும்மாயிரு அம்பி நீ உன்க்கென்ன தெரியும்? இவங்களுக்கெல்லாம், கோயில் சிலை மாதிரி, அப்பப்போ தோத்திரம் பண்ணிக்கிட்டே யிருக்கணும். உன்னைப்போல் உண்டான்னு ரெண்டு கையையும் மாறி ஏந்திகிட்டு வரம் கேட்டுக்கிட்டே யிருக்கணும். நம்மமானேசருக்கு என் நச்சரிப்பு எப்பவுமே பிடிக்கும். இல்லாட்டி ஏதும் நடவாது, எனக்குத் தெரியும். உத்தியோகமா, கொக்கா? நீ என்ன நெனச் சிட்டிருக்கே? இதைக் கேக்கறதுக்கு நேரம், வேளை, போது, வெட்கம் வேறேயா?';

மாடியில் வங்கி அலுவலகம்.

கீழே இரும்புக் கிராதி அறைக்குள் பெட்டகம். தினம் - ன த் ைத எடுப்பதற்குக் காலையிலும், அலுவல் முடிந்ததும் மாலையில் உள்ளே வைப்பதற்கும். மாடிக்கும் கீழுக்கும் இரண்டு ஊர்வலம் நிச்சயம்.

முன்னால் காஷியர்.

நடுவில் கல்லாப்பெட்டியைத் துக்கிக் கொண்டு, Cash peon.

முத்தையா தான் Cash peor . பின்னால் மானேஜர்/அல்லது அக்கெளண்டென்ட்

அது ஒருவருக்கொருவர் யதா செளகர்யம், இல்லை மானேஜர் செளகரியம்.

(நீதான் போப்பா! எனக்கு உடம்பு தள்ளல்லே!)