பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

இடையிடையே மீட்ட நகையை எடுக்க. அடகு வைத்த நகையை உள்ளே வைக்க. முறைப்படி மானேஜரும் கேஷியரும் இறங்கியா கணும். ஆளுக்கொரு சாவி.

{ராமலிங்கம்! இந்திாசாவி: அரை நானைக் கேட்டவ. லுக்கு ஒட்டியானத்தைத் து க் கி க் கொடுத்துடம் போறே!} -

மானேஜர் காலதியரிடமே தன் சாவியையும் கொடுத். தனுப்புவது அல்லது தானும் கூட வந்து இறங்கி, ஏறுவது: இருவருக்குமிடையே உள்ள உறவு, சமயத்தின் உசிதம், வங்கிவிதிகள் வேறுசொன்னாலும், தினசரி நடைமுறை சாத்தியங்களைப் பொறுத்தது.

ஈதெல்லாம் போகப் போகத் தெரிந்து கொண்ட விஷ். பங்கள்.

மானேஜர் ஒன்றும் ஏமாளி அல்ல. எதிராளியை எடைபோடுவதில் மன்னன். அதற்கு வெறும் அனுபவம் மட்டும் போதாது. கூடவே அவரிடம், ஏதோ விவரிக்க முடியாத, பிடிபடாத ஒருதனி அம்சமும் அவருக்கு இருந்த தென்றே சொல்லணும். ஏதோ ஒரு பேச்சு த்வனியில், சொல்வதொன்று நினைத்து வந்திருப்பது வேறொன்று என புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டினாற் போலேயே தெரிந்து கொள்ளும் நுண்புலன். ஏதோ சொக்குப் பொடி அடேயப்பா!

அதுவும் போகப் போகத் தெரிந்து கொண்ட விஷயம்

மாடியும் நெட்டுக் குத்துத்தான். இன்று செவ்வாய்க் கிழமை. செவ்வாயே கொஞ்சம் ‘டல் தானாம். மாதக் கடைசி வேறே.

‘அம்பி இதுதான் சிவராமன் சார். லெட்ஜரில் புலி, கூட்டல் கழித்தல் மறுமுறை செக்’ பண்ணவே.