பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 @rr rs

“ஹெட் ஆபீஸ் கடன்காரன் ஆள்தரமாட்டேன் கற்ானே முத்தையா! வீவுலே போயிருக்கற அக்கெளண் டண்டுக்குப் பர்த்தியை இதுவரை காணோம். இதோ என்கிறான். அதோ என்கிறோன். அவரும் வரவாரம் திரும்பி விடப் போறார். அவன் சூழ்ச்சியும் அதுதானே! இதோ இனிஸ்பட்டன் வந்துட்டான் காள கண்டன். அவன் கேக்கற ஸ்டேட்மெண்டுகளில்பாதிக்குமேலே நான் மாரடிச்சாகணும். இந்த உடம்பில் ராக்கண் முழிப்பேனா பகல் கண் முழிப்பேனா என் கதை ஒயற சமயத்துலே உங்கள் வாயிலே வேறே போட்டு எடுக்கறான். அத்தோடு குதிரைவால் மயிரிலே பட்டுக்குல்லா தைச்சுப் போடணுங்

கறான்.”

“ஐயா, எல்லாம் நீங்களே சொல்றீங்க. இத பாருங்க” மரக்கடை மரக்காயன் ஒரு வீட்டைக் கிரயம் பண்ணி அம்பது ரூவா வீட்டுலே ரொக்கமா வெச்சிருக்கான். என்க்குத் தெரியும். என்னை விட்டும் போவாது-ஆனா, ஸ்டேட் பாங்க் மானேஜர் தலையை அறுத்தகோழியாட்டம் அவனை ஒருவாரமா சுத்தி வராரு. ‘முத்தையா, அந்த ஆள் எங்கெங்கே தான் பின்னாலே வரதுண்ணுல்லே'ன்னு மரக்காயன் விளுந்துவிளுந்து சிரிக்கிறான். ‘ஐயா, நான் செங்கல்லைத் தொட்டுக்கிட்டிருக்கேன்னு ஒருதரம் வாய் விட்டே சொல்லிட்டேன். ஊஹ இம், ஆள் சட்டை பண்ணினாத்தானே! ஆனால் அவனும் எத்தினி நாள் இந்த மாதிரி உலுத்தலைத் தாக்குப் பிடிக்கமுடியும். அவர் புது மானேஜர், ஆபிசுலே தங்கறதேயில்லே. ஆள் சுத்தாத இட மில்லை.புதுக்குதிரையும் அவங்க ஹெட் ஆபிஸ் லே அவுத்து விட்டிருக்காங்க களத்துமேட்டுலே நெல் அளக்கறச்சே, தென்னங்கொல்லையிலே தேங்காய்ப்பறியிலே, பண்ம் கைக்குக் கை மாறுமே அப்பவே அடிமடியைப் பிடிச்சுக் கறார். என்னய்யா ? நீங்க அமீனாவா? போலிஸா ?ன்னு எரிச்சல்லே கேட்டாக்கூட, ‘நான் பத்துவருசத்துக்கு முன்னால் ஒடிப்போன உங்க வீட்டுப் பேரன், இப்போ என் பங்குக்கு வந்துட்டேன்!” மனுசன் சிரிச்சால்,