பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு - g

பேசினால், பொண்ணாப் பிறக்க இருந்த சிசு பிள்ளையாப் பூமியிலே விளுந்துடும்.’

‘உன் சினிமா டயலாக் இவ்வளவுதானா? இதுக்கும் மேலேயோ?” -

நான் சினிமாப் போறதேயில்லிங்க” ‘நீ போய்க் கையோடு பணத்தை வாங்கிட்டு வந்துட வேண்டியதுதானே!” மானேஜருக்குக் கைகள் பரபரத்தன.

நானும் உன்னோடு வரட்டுமா ?”

அம்பதுக் கெல்லாம் நீங்க எதுக்கு? ஐயாவைப் பாத்தா மிரண்டுடுவான்.’ - -

அப்போ போயேன்! ஏன் இன்னும் இங்கே நிக்கறே!” :பாஸ் புக்’ முத்தையா குரவில் ஒரே சமயத்தில் சிம்ம கர்ஜனை ஆராய்ச்சி மணியின் வீச்சு, சப்பாத்திப் புதரில் மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியின் எப்படி அது? மானேஜர் கூடச் சற்றுப் பின்னடைந்தார். அவன் கொடுத்து ஆறுமாதமாவுது அவசரமாக வேனும். பாஸ்டிக்கையே தேடியாவனும். No Pass book. no deposit” (அட, இங்கிலீஷ் வேறேயா):

“முத்தைய blackmail Lisrsp?’’ அவர்குரல் பூம் என்று அதிர்ந்தது. அவருக்கு முகம்

கெளண்டருக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரிருவர் திரும்பிப் பார்த்தனர். .

ஒரு சங்கடமான மெளனம் அங்கு தேக்கம் கண்டது இரட்டையர் அவரவர் புத்தகத்தின் மேல் கவிழ்ந்த தல்ை நிமிரவில்லை.

நான் நின்றி இடத்திலேயே உடல் வெடவெட. சுவரோரம் ஒரு சுண்டெலி விழுந்தடித்துக் ாெகண்டு இடிநிதி