பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t{}6 ajff. 7

இருவரும் (எந்த இருவர் ஹம்)என் இப்படி சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள் : அந்தஸ்து உயர உயர இப்படித்தான் ஆகுமோ ?.

ஹெட் ஆபிஸிலிருந்து வந்தவருடன் எல்லோருே இப்படி முறைத்துக் கொள்ள முடியுமோ ? - இது தைரியத்தில் சேர்த்தியா ? அல்ல அசட்டுத் துணிச் சலா ? அல்ல விரக்தியா ? -

சாவில் இருப்பது இன்னும் இரண்டு வருடங்கள், கொடுத்தால் சரி

கொடுக்கா விட்டால் அதுவும்சரி, விட்டது பிடுங்கல்

அந்தமுனைவரை எண் ண ஏதும் நடந்துவிடவில்லை.

(இல்லை நடத்துவிட்டதோ ?) ஆனால் இது பற்றியே எனக்கென்ன ? பாஸ்புக் அதுபாட்டுக்குப் பக்கம் பக்கமா இழுக்கறது. லெட்ஜரைப் பார்த்து காப்பியடிக்கற சமாச்சாரம்தான். ஆனால் இது லெட்ஜரா, கடலா ? கரையைக் கான முடியுமா, முடியாதா ?

மானேஜர் ஏதோ மெட்டை முனகிக்கொண்டு மெதுவாக மாடியேறி வருகிறார். அவர் பின்னால் முத்தையா முகம் மலர்ந்திருக்கிறது. நேரே காஷ் கூண்டுக்குள் போய், நோட்டுக் கத்தைகளைத் தோல் பையிலிருந்து கொட்டுகிறான். .

விசுவம் முகம் சுண்டுகிறது. ஒத்தையை அள்ளிண்டு வத்துட்டையோன்னோ ? கைஇருப்பே லக்ஷத்துக்கு மேல் பூஞ்சைக்காளான் பூத்துட்டுக் கிடக்கு.”

“என்ன அம்பீ எந்த மட்டில் இருக்கு ? இன்னி சாய்ந்தரம் கொடுப்பதாச் சொல்விட்டேன்” என் பதிலுக் குக் காத்திராமலே அறைக்குப் போகிறார். ‘முத்தையா, டியன் வாங்கிண்டுவா. இன்ஸ்பெக்டருக்கும் சேர்த்துத்