பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 லா, ச. ரா.

போறப்போ வரப்போ, அடப்பம் மாதிரி முடிஞ்சதை அக் குளில் இடுக்கிண்டு, கணக்கில் கட்டின வரை லாபம். அதிலேயும் Procedure பிரகாரம் நடக்கணும்னா, நடக்கிற காரியம் எதுவுமேயில்லை. Look here, இது கம்ப்ளெயின்ட் இல்லே, இருக்கிற நிலவரம் இப்படி, இப்படித்தான். This is field, not H. O.

‘இப்போ நடக்க வேண்டியதைச் சொல்லுங்கள், இன் னிக்குக் காஷ் எண்ணி, முடியாது.”

“நான் என்னசெய்யனும் சொல்லுங்கோ. ஏற்கனவே ஆள் பற்றாக் குறையில் காவியரை உங்களுக்கு உதவிக் குக் கொடுத்துட்டேன். முன்னால் வந்து போன வங்க, சா த ர ன மா , ஒ த் ைத ைய அங்கங்கே எடுத்து Testcheck ப ண் ணு வ ா ங் க , தூக்கி எறிவாங்க, “is it alright mister? “yes sir” “O K.” @iut i Gurr paulis களும் இருக்காங்க. உங்கள் மாதிரி,ஒரொரு கட்டா காதை நிமிட்டிக்கிட்டு இருக்கிறவங்களுமிருக்காங்க. அவங்கவங்க சுபாவம், style, நம்பிக்கை. இதில் நான் தலையிடலாமா? You are a ruleman. alright, a tlgsf63 G37 offey Luig. நீங்க செய்யுங்க.”

‘இவ்வளவு காஷ் கையிருப்பிலே கூடாது.”

“அப்பவே சொன்னேனே, அது வேறே ப்ரச்னை. உங்கள் ரிபோர்ட்டில் தான் வரப் போவுதே, நான் பதில் எழுதிக்கிறேன். இன்ஸ்பெக்டர் சார், இது மண்டைச்சளி ஓயாத சமாச்சாரம்.”

இன்ஸ்பெக்டர், மேல் உதட்டை மீசை நுனி இருக்க வேண்டிய இடத்தில் (இல்லை), யோசனையாகத் திருகிக் கொண்டே

‘இன்னிக்கி எண்ணி முடியாது இதை இப்படியே

பூட்டி Sea வெச்சுடறேன். இன்னி ரொக்கத்தை நீங்கள் தனியாப் பூட்டிக்கங்க.”