பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

Damn its fi soggirl?srsbstraGo ? Stop it!” மூக்கை உறிஞ்சினேன். ‘ஸார் , ஸத்தியமா-,’ “ராமா ராமா!-"மானேஜருக்கு உடல் குலுங்கிற்று செவிகளைப் பொத்திக் கொண்டார். இந்தக் காலத்துப் பசங்களுக்கு ச த் தி ய ம் தண்ணிப் பட்ட பாடாப் போச்சு. நமக்கு அதைச் சொல்லவே நெஞ்சு அஞ்சறது. ஆனால் இப்போ உனக்கு ஆணை வெக்கறதைத்தவிர வேறே வழியில்லை. இன்ஸ்பெக்டர் எங்கே ?”

அவர் அப்படியே லாட்ஜுக்குப் போயிட்டார். மேலே ஒரு நடை வருவானேன்னு- இது காஷியர். சரி என்ன தேர்ந்தது ? திருப்பி விவரமாச்சொல்லு” ‘முன்னாடி காஷியர் ஸார், நடுவுலே முத்தையா தலையில் காஷ்பெட்டி, அதுமேலே ட்ரே-’’

ஒஹோ அப்படியா ? புரிஞ்சுபோச்சு. இத்தோடு எத்தனாந்தடவை எச்சரிச்சிருக்கேன் காசி ? கீழேயிருந்து இன்னொரு பெட்டி கொண்டுவரத்துக் கென்ன ?”

முத்தையாவும் காஷியரும் ஒருவரையொருவர் பார்த் துக் கொண்டு புலிக்கெதிரே உள் ஒடுங்கிப் போனார்கள். “உடம்ப் வணங்கல்லே, இல்லியா? பணத்தை எடுக்க வழி காட்டியவன்களே நீங்கள் ரெண்டு பேரும் தான். இப்போ நேரமில்லை, பின்னால் கவனிச்சுக்கறேன். என்ன போச்சு, எத்தனை போச்சு பார்க்கணும். கீழே போய் tray ஐக் கொண்டு வாருங்கள்.”

தட்டைக் கொண்டு வந்து பதிவுப் புத்தகத்துடன் சோதித்துப் பார்த்ததில், ஒரு பத்து ரூபாக்கட்டு Missing. “என்ன, ஒரு ஆயிரம் out ஆ ? என்ன காசி, உன் பெண்டாட்டி கழுத்திலிருந்து தான் வசூலிக்கனுமா ? கழுத்து தாங்குமா ?”