பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ff

கெட்டவனுமில்லை. என்கிற பழமொழிகூட என் விஷயத்தில் பொய்த்துப் போயாச்சு. என் நிலையில் துளிக் கூட மாறுதல் இல்லை.

உங்கள் சிபாரிசில் அவனுக்கு விடிந்தால் போதும்எனக்கு இனி என்ன இருக்கிறது? இனி விடிந்தாலும் எனக்கு வித்தியாசம் தெரியப் போமோ? உடம்பை ஆயி ரம் கோளாறு பிடுங்கித் தின்கிறது. நான் போனாலாவது இருப்பவர்களுக்கு விடியுமா? ஆனால் பொன்தாலி காட்டி லும் அவள் கோர்த்திக்கும் மஞ்சள் பலம் கெட்டியாயிருக் கிறது. என்ன செய்வேன்? என்ன செய்வோம்?

அந்த நாள் சினேகிதத்தின் நம்பிக்கையில் எழுதும் கடிதத்தின் மேல் உன் ஆயிரம் ஜோலி நடுவில் உன் கண் பட்டதன் மூலம் மறுபடியும் நம்பிக்கை ஏற்படுமா?

Ο 

சென்று போன நாட்கள்.

செயல் படும் நாட்கள்.

முடிந்த போது, முடிந்தவரை.

உதவி கூட செய்யமுடிந்த நாட்கள்.

ஆனால் கடிதம் எழுதுபவர்கள் என்னைக் கடவுளாக நினைத்துக் கொள்ளும் போது

அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆனால் பல நாட்கள், வெறும் நினைவோடத்தை, காகிதக்கப்பலை, வாய்க்காலிலோ, நதியிலோ, கடலிலோ ஏற்றி, அவைகளின் மிதப்பை, தத்தளிப்பை, கவிழ்தலை வேடிக்கைபார்க்கும் விதி நாட்கள்.

ஆனால் வெறும் நினைவோடமா? அங்குதான் கேள்வி. கேள்வி தூண்டிய நினைவுகள் பாம்பெனக் காலை, கழுத்தைச்சுற்றி, பிளந்த நாக்கு துருவித்துருவி இடம் தேடி நக்குகிறது.

{} C) {