பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு ?

கனும், ஆமாம், உனக்குப் பிடிச்சுதோ இல்லையோ, நான் சொல்லிட்டேன். சும்மா வாசற் படியில் உட்கார்ந்துண்டு வானத்து விளிம்பைப் பூமியோடு ஒட்டியிருப்பது பிசினா, சோத்துப் பருக்கையா? என்று சிந்தித்துக் கொண்டிருந் தால் போதாது. பயனற்ற சிந்தனை வயதில் நீ இப்போது இருக்கே. சினிமாவின் பொய்யான சுவர்க்கத்தில் உனக்கு வீட் என்ன, Pilot ஏற்பாடு பண்ண விசுவும் சிவராமனும் இருக்கான்கள். அவன்க சொல்றதெல்லாம் நீ செய்ய ஆசைப்பட்டால், புலியைப் பார்த்துப் பூனை சூடிக் கொண்ட கதைதான். ரெண்டும் உள்ளூர் ஜமீன், உத்யோகம் கெளரவத்துக்கு. வயிற்றுப் பிழைப்புக்கல்ல.”

“என்னை ஏன் சார் அதில்லே சேர்க்கpங்க” சிவ ராமன் நடு வெட்டினான். ‘எனக்குப் பொறுப்புக்கள் இருக்கு.’

‘Then, it is good. உழைப்பு, உழைப்பு உழைப்பே தெய்வம், உழைப்பே தவம். எங்கள் காலத்துச் சின்ன வயதில் எங்கள் பெரியவாள் எங்கள் முழங்கால் எலும்பில் விறகு கட்டையால் அடித்துச் சொல்லிக் கொடுத்த முதல் பாடம், கடைசிப்பாடம் எல்லாமே அதுதான். உழைப்பு. உழைப்பு. முத்தையா, மீன், கறி, ஆமை சூப் எல்லாம் அக்கா மகனுக்குப் பழக்கிட்டியா? உண்மையில் இவன் உன் அக்கா மகனா? அதாவது உன் பெண்டாட்டியைத் தவிர, உலகத்துப் பெண்மக்கள் அத்தனை பேரும் உனக்குத் தாய்மார். உடன் பிறந்தார், பெண்கள் என்கிற பெரிய உறவு முறை தவிர? சரி, சரி, தலையைச் சொரிய வேண்டாம். புரிஞ்சுண்டுட்டேன். இந்தப் பையன் உன் வீட்டு உப்பிலும் தண்ணிலும் ஊறினதுபோதும். இனி கொஞ்ச நாள் என்னோடு இருக்கட்டும். என்ன சொல்றே?”

‘நான் சொல்ல என்ன இருக்குங்க ? இனம் இனத்தோடு தானே சேரும்!"