பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#30 லா. கூரா,

மாவிளக்கு சிதைத் தீ எல்லாமே

அவ்வப்போ ஞான ஒளி. காலமெனும் பாடு எம்மா நீளம் இழுக்கிறது! கண் குளிக்குப் பனித்த கண்ணிரின் சுனை கண்டபின் ஸ்படிகம் தெளியக் கேட்கவா? அவ்வவ்வமயங்களின் அந்தந்த அபூர்வ தயக்கங்களில் ஜீவநதியின் அடிவயிறு ரேகைகள் மு ன்னும் பின்னுமாய்ப்

பின்னுவதே தெரிகையில் அவையில் முன் எது? பின் எது? பிறருடன் பங்கு கொண்டு மகிழ இதோ இங்கு அதோ அங்கே-அதோ அதோ!!! நினைவு மலர்களைப் பறித்துச் செண்டுகட்டி அதன் மெத்துள் முகம் புதைத்து, பரிமளத்தில் என்னை நான் இழக்கையில்

நான் பறித்த பூக்களில் முன்முளைத்தது எது பின் அலர்ந்தது எது கண்டேனா?

காண வேனுமா? பிறருடன் பங்கென்றேன் - பிழை, பிழை: சில அனுபவங்களின் சுய நலனில் பங்குகொண்ட

அந்தப் பிறனும் நானே.

என்னைப் பிறனாய்க் காணும் அளவு பழைய

நினைவுகளின் அசை

என்னை இரண்டாகப் பிளந்த போது என்னில்

பிறந்த பிறனை

பொறாமை கொள்கிறேன். ஏ. நீ, நீ எப்போது வத்

. தாய்?