பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 . Aa}fr 1 P

தேரும் குழப்பம், இது அப்போது எதில் சேர்த்திகண்ட கதை என்பதா ?

Legend நெற்றியில் ஜிகினாப்பொட்டு, மாடிச்சுவருள் அடங் கிய குளோப் வெளிச்சத்தில் சுடர் விட்டது.

இப்போக்கூட உடல் பரபரக்கிறது. அந்தக்காr நின்ைவில் எழுகையில். --

“நான் ஒரு தாத அதிர்வு.” இந்த பாஷை என்னுடையது அன்று. ஆனால் இது இந்நாள் என்னுள் எங்கு ஒளிந்து கொண்டிருந்தது: ஆனால் இது என்ன?

“பாலா, இந்தப் பையன் இனி தம்மோடு இருக்கப் போகிறான்.”

இறங்கி வருகிறாள். தாழம்பு நிறம். நீலப்புடவை, நீலரவிக்கை, நீலpகினாப் பொட்டு. கைகளில் நீல வளையல்களின் லேசான நீல கிலுகிலு. பாலாவின் இன் றைய ராக், நீலாம்பரி.

எனக்கு மூத்தவள்தான்.

முகத்தில் கடுப்பு இல்லையே அன்றி, புது முகம் கண்ட ஒரு ஆர்வம், வியப்பு கூட அங்கு இல்லை.

இன்று மட்டுமன்று. இங்கிருந்தவரை, அம்முகத்தில் என்றுமே நுட்பமான பாவங்கள் விளையாடவில்லை. உறைந்துபோன .ெ சதுக் கல் களி ல் , எப்போதேனும் கன்னங்களில் லேசான இளக்கம்; அவ்வளவுதான். அதுவும் உடனே மருள் கண்டு மறைந்துவிடும்.

(நாடகம் பண்ணுகிறேனா ? ஆனால் என்னையே. நான் யாரிடம் ருசுப்படுத்திக் கொள்வேன் ?)

ஆனால் மந்த முகமல்ல. நெற்றி, கண்கள், கன்னங் கள், மோவாயின் தெளிவில், அவ்ைகளைச் செதுக்கிய