பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 135,

சிருஷ்டியின் உளிப்பளப்பளப்பே கண்-(இல்லை மனமா?)கூசுகிறது.

அம்பி, உன்பெட்டி, படுக்கை; பொருள் என்று இருந்தால், முத்தையாவிடம் சொல்வியோ, நீயோ கொண்டுவந்துகொள்: என்ன முழிக்கறே ? சரி, சரி, பரவாயில்லை. நாளைக்கு A. N. ஜவுளிக்கடையில் உனக்கு வேண்டியதை வாங்கித் தைக்கக்கொடு. என் பேரைச்சொல். பில்லை எனக்கு அலுப்பிவிடுவார்கள். பாலா, எனக்குப் பக்கத்து அறையை இ. வ னு க் கு க் காண்பி-உஸ், அப்பாடா, What a day!’

சோபாவில் சாய்ந்தபடி உடைகளைக் கழற்ற ஆரம் பிக்கிறார். பனியனுக்கு அடியில், பறங்கிக் கொட்டை போல் இளந்தொந்தி.

அவள் மாடி ஏற, நான் பின் தொடர்கிறேன். நேற்று வரை திக்கற்றவன் இன்று, மாடியில் எனக்கென்று ஒரு அறை. கனவாய்க்கூட இல்லை, திகைப்பூண்டாயிருக்கிறது.

RSL, உங்களுக்கு நன்றி செலுத்துவேனா? மானேஜ ருக்குச் செலுத்துவேனா ? இதிலிருந்து எல்லாரும் நல்லவரே என்பதுதான் இன்றைய பாடமா ? ஒன்று தெரிகிறது. அங்கங்கே விதி மூலை என்று இருக்கிறது. அங்கே காத்திருக்கும் குரங்கு (?) தன் கூரிய நகங்களால் என் கண்களைக் குதறப்போகிறதா, அல்லது வாயில் பஞ்சாமிர்தம் ஊட்டப்போகிறதா ? அதுதான் விதி மூலை ரகஸ்யம்.

பின்னல் தடுமனாய், சோம்பிய பாம்பாய், கிட்டத் தட்ட ஒரே சமனாய் இடைக்கும் கீழ் இறங்கி, நுனியில் நீல ரிப்பன். படி ஏறுகையில், அவ்வப்போது பிடிசுவரின் மேல், கைவிரல்கள் அழுந்துகையில் நகங்களில் ரோஜாத் திட்டு ஒற்றி ஒற்றி மங்கிற்று. செழிப்பான உடல் இடையின்