பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா. ச. ரா.

flo, No, No

நான் இப்படி உன்னிப்பாய்க் கவனிப்பது சரியில்லை. நியாயமேயில்லை. ஆனால் சிருஷ்டியின் வண்ணக் குழை வுக்கும் அதை மீறிய தற்செயல் இருக்க வேண்டும். திட்ட மிட்ட செயல்பாடினும் உயர்ந்ததாய், அமைந்தது என்று ஒன்று தனி. இது ஆள் நடப்பது மாதிரியில்லை. ஏதோ சிலை, ஒவியம் உ யி ர் த் த து போலிருப்பின் அது இயற்கையா, செயற்கையா (நாடகம் பண்ணுகிறேனா?) சிலையும் ஒவியமும் மனித யத்தனம். ஆனால் அது உயிர்த்ததென்கையில் விபரீதம் ஏதோ நுழைகிறது.

ஈதெல்லாம் வேதாந்த விசாரணையா ? விஞ்ஞானக் கேள்வியா ? கலையின் ஆராய்ச்சியா ?

எந்த இடத்தில், எந்த சமயத்துக்கு எது ?

அறைக்கதவைத் திறந்து வாசலில் நின்றாள். நான் தயங்கி நின்றேன். கதவுமறைவில், அவள் ஸ்விட்சைத் தட்டி, விளக்கை ஏற்றிக் கொண்டதும், தலையோடு கையும் சமிக்ஞையில் அறைப்பக்கமாய்ச் சாய்ந்தது.

குட்டி அறை. இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள். எதிர் வாசல் பால்கனியுள் திறந்தது. ஒரு ஜன்னல் அருகே மேஜை நாற்காலி. அலமாரி நிறைய அடைத்த புத்த கங்கள். சுவரோரம் ஒரு தலையணையும் ஜமக்காளமும் சுத்தமாய் இறுகச் சுருட்டி வைத்திருந்தது. வெளிச் சத்துக்கும் காற்றோட்டத்துக்கும் பஞ்சமில்லை.

என் அறை.

என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள, நான் திரும்பினால் அவள் இல்லை.

அ மா னு ஷ் ைய .

தோன்றிவிட்ட சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் சுவைத்து, ஓசையைக் கூட்டிப்பார்க்கிறேன்.