பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லா, ச. ரா.

சிவராமனும் விகவும் என்னைக் காப்பிக்கு அனுப்புவ தில்லை.

“அம்பீ மானேஜர் கூட மணியடித்து வரவழைப்பதில்லை. நீங்கள் ஒருமுறை அழைத்தால் போதும். அனுமன் மாதிரி பதறி ஓடி வருவேன். -ஸார், நீங்கள் என்னை மணி அடித்து அழைத்தால் ஆகாதா? இதில் என்ன வந்துவிட்டது?-நாய் வேஷம் போட்டால் குறைத்துத் தானே ஆகணும்? காமுப்பாட்டி என்னை நாயே!” என்றுதானே அவள் குரூரம் அத்தனை வும் அந்த அழைப்பில் துப்பத்தானே அழைப்பாள்!

லார்-உங்களுடைய “தோ தோ!!” நாய்க் குட்டியாக இருக்கக் கொடுத்து வைக்கணும். மானேஜர் ஸார்! என் னவோ முறையில் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சொல்லப் பயமாயிருக்கு நாளுக்கு நாள் வெளியே. சொன் னால் அசம்பாவிதம். ஆனால இம்மாதிரி ஒரு நிலையும் உண்டோ? தெரியவில்லையே! திகைப்பாயிருக்கே!

jos

வெளி வேலையாக-கடிதங்கள் கொடுக்க, ஆளை அழைத்துவர-என்னை அனுப்புவதில்லை.

நான் வேலை கற்றுக் கொள்கிறேன், வரிந்து வரிந்து பாஸ்புக் எழுதுகிறேன். பழைய தஸ்தா வேஜு புதுசு பழக்கிக் கொள்கிறேன். filing Records காஷியருக்கு ஒத்தாசையாக காஷ் வாங்குகிறேன். ரிஜிஸ்தரில் பதிவு செய்கிறேன்.

கூட்டுகிறேன், சரிபார்க்கிறேன். ஒரு நாள் நா ற் காலி யி ல் ஏறி லெட்ஜரிலேயே உட்கார்ந்துவிட்டேன்.

(விசுவத்தின் தகப்பனார் காலமாகி விட்டார். இருவருமே லிவு).