பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 Gfr. g*

சீட்டுப்போட்டுக் குலுக்கினையா? ஒரு மு. டி. , க் கு வந்தையா? இல்லை, என் நாட்டுப் பெண்-அதான் நான் இன்னும் கண்ணால் கண்டிராத, அனேகமாக காணப் போறது மில்லாத உன் பட்ட மகிஷி? என் கரதராசு உன் வரைக்கும் எட்டாதபடி அமுக்கிப்பிட்டாளா? நீ தான் ஒருவரிகூட தெரிவிக்காமே கலியாணம் பண்ணிண்டுட்டே, பண்ணிண்டிருப்பே ஆமா, இத்தனை நாளைக்கு பண்ணிக்காமே இருப்பையாக்கும், ஆனால் நீ பத்திரிகை அனுப்பிச்சால் மத்திரம் வந்திருப்பேனா? ரயில் சார்ஜ்? இப்போ நான் உன்னைக் கேக்கற ரூவாயும் கைச்செலவுக் குத்தான். அப்பப்போ என்னைச் சீட்டைக்கேட்டு, ரயில் காரன், கட்டையிலே போவான், அது என்னிடம் இல் லாமை, என்னை அங்கங்கே இறக்கி விட்டாலும், அப்ப டியே காசிவரை போய், கங்கையிலே கட்டையைப் போட நத முடிவு. பண்ணிட்டேன். இத்தனைநாள் கழிச்சு சுங்கம் கேக்கற கிழம் இதுயார்னு திகைப்பாயிருக்கா? எள்ளுக்கண் ணைக் கசக்கி முழிச்சுப்பாக்கறியா ? உன் கண் பெரிசாயி டுத்தா? பிறவி எங்கேமாறும்? என்னிக்குமே நேர்முழிகிடை யாது.அன்னிக்கே பல்லுகூடபடாமே,முழுசாமுழுங்கிட்டு, புத்தா, பூலோகமா, கைலாசமான் னு திறந்த கண்ணுலே மண்ணைப்போடுவே. இப்போ கேக்கனுமா ? இன்னும் கத்துண்டிருப்பே இல்லியா? நான்தாண்டா காழுப்பாட்டி. வேறுயார் இவ்வளவு உரிமையா உனக்கு எழுதப்போறா? அதுக்கே நீ எத்தனையோ புண்ணியம் சேஞ்சிருக்கணும். நெனச்சுப் பார்த்துக்கோ. ஆமா நான் ஊருக்கெல்லாம் ஒரே கா மு ப் பாட் டி ன் னா , நீ எனக்கு ஒரே ஒரு பேராண்டி ...”

காமுப்பாட்டி இன்னும் உசிரோட் இருந்தால், வயசு 110. எங்கே இருக்கப்போகிறாள்? ஆனால் சொல்ல முடியாது. கன்னி விதவை வஜ்ரக்கட்டை, தேய்வா ? செலவா ? யமனே அவள் நாக்குக்கு அஞ்சி அவளிடம்