பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 லா. க. ரா

வயிற்றுப் பிழைப்புக்கும் சம்பந்தம் கிடையாது. நாம் என்ன செய்ய ?”

எப்படியும் இந்தப் பர்க்ஷையில் டக் அடிக்கர்மல் தேற வேண்டும். இந்த வருடத்துக்குள் எந்த ரூல் மாறி, இருக்கிற சட்டத்தை அடித்து என்வாயில் மண்ணைப் போட்டு விடுகிறதோ ?

‘அம்பி, படி,படி, குறுக்கு வடத்துக்கே காலமில்லை, தெரியுமோன்னோ ? உனக்குப் பூனூல் டோடவில்லை. தெரியும். ஆபீஸ் தாக்கல் வரை நீ முத்தையாவின் அக்கா மகனாவே காலத்தைத் தள்ளு. அதில்தான் உனக்கு விடிமோrம்”

எனக்குப் பயமாயிருக்கிறது. விழுந்து விழுந்து படிக் கிறேன். இரவில்லை, பகலில்லை. உடலைப் பந்தயத் குதிரையாக விரட்டுகிறேன். ஆனால் கூடவே ஒரு ஆச்சர்யம். இப்படித் திடீரென ஒரே முறுக்காய் மன தையும் உடலையும் ஒருகாரிய முனைப்பில் பிழிந்தெடுப் பதில் ஒரு உற்சாகம் தெரிகிறது.

நள்ளிரவில் புத்தகத்தை எதிரே வைத்துக் கொண்டு, தூக்கத்தில் சுவாரஸ்யமாகச் சாமியாடுகையில் சுவர்க் கோழி சில்'லென்று கூவிக் கலைத்துவிடும்.

அப்படியும் ஒரு சமயம், தூக்கம் அழுத்தி, தழுவி, முகம் கவிழ்ந்து விடுவதுமுண்டு. விழிப்பு வந்தபோது என்மேல் போர்வை

gJ fTfr ?

நீங்கள் போர்த்தினர்களா ?

நீ போர்த்தினாயா ?

யாரைக் கேட்க முடியும் ?

இந்தக் கேள்வி கேட்டுத்தான் ஆகணுமா ?

பதில் வந்து தான் ஆகணுமா ?