பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



ஆயினும்பதிலுக்கு மனம் நோக்காடுடன் ஏங்குகிறது. ஏ காவியமே நீ எங்கெங்கெலாம் ஒளிந்துகொண்டு எதிர்பாராத சமயங்களில், கடைசிவரை பிடிபடாத நிலையிலேயே காட்டிக் கொள்கிறாய் ?

அன்பின் பல உருக்களில் போர்வையும் ஒன்று போலும்!

ஆயினும் உருத்தெரியாததை வைத்துக்கொண்டு நான் அதற்குக் குஞ்சலமும் மணிகளும் கட்டுகிறேன். கட்டிக் கொள்கிறேன் மணிகள் என் எண்ணத்தின் தென்றலில்

ஒன்றுடன் ஒன்று உராய்கையில் உட்செவியின் கட்செவியில் ஏதேதோ உருத்தெரியா தா தங்க ள் சப்தங்கள் எழுகின்றன.

பெருமூச்சு. எண்ணத்தின் தென்றல்.

வெள்ளிக்கிழமை, அவர் கீழே, ஹா வி ல், ஸோஃபாவில் அமர்ந்தபடி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். நான் வீட்டுள் நுழைகையிலேயே சொல்வி வைத்தாற் போல், என் அணைப்பிலிருந்து ஒன்றிரண்டு பார்சல்கள் நழுவி, தடுக்கப் போய் எல்லாமே அவர் காலடியில் விழுகின்றன. அவைகளுடன் நானும் விழுகிறேன். சாஷ்டாங்கமாக.

அடேடே என்னப்பா இதெல்லாம் : இன்னிக்கு என்ன விசேஷம்? என்ன, கை நிறையக் காசு வேறே?” நோட்டுக்களை அவர் கையில் திணிக்கிறேன்.

“இன்று சம்பளம், என் முதல் சம்பளம் ஸார் .'