பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 @

“ஒ, தீர்க்காயுஷ்மான்பவ. ஒழுங்காய் பாங்கில் ஒரு கணக்கு ஆர்ம்பித்து, பணத்தை அதில் சேர்த்து வைத்துக் கொள். சமர்த்தாயிரு. நீ எனக்குச் சாப்பாட்டுக்குத் தனியாக ஒண்னும் தர வேண்டாம்.” -

என் விழிகள் தளும்புகின்றன. ‘ஸார், எல்லாமே உங்களுடையதுதான். உங்கள் பிள்ளை மாதிரி, இல்லை. ஸார், தப்பு தப்பு, மன்னிச்சுக்கோங்கோ,உங்கள் அடிமை, எனக்கு அப்பா அம்மா இல்லை- தேம்பித் தேம்பி அழுகிறேன்.

-உஷ்- நிமிர்ந்து உட்கார்கிறார். ‘'இப்படி உட்கார் -இதோ என் பக்கத்தில்” உட்கார்ந்து கொள்கிறேன். மூக்கை உறிஞ்சுகிறேன். முதுகைத் தடவுகிறார். ‘yoம் know, I am shy of tears- gou storer Goff figloo--gi, அழும்படி? நீ சொல்வதெல்லாம் கேட்க நன்றாயிருக் கிறது. இந்தக் காலத்தில் பெற்ற பிள்ளை கூட இப்படிச் சொல்ல மாட்டேன்கிறான். முதல் சம்பளம் வாங்கின வுடனே என்ன பண்ணப் போறேன் தெரியுமா? ஒரு telefunken வாங்கி ஸ்ட்ராப்'போடு கழுத்தில் மாட் டிண்டு வரப் போறேன்ன்னு அப்பன் கிட்டேயே சொல்றான். குழந்தை அவன் என்ன செய்வான்? இந்த வீட்டில் அவனை அப்படி அடக்கி வெச்சிருக்கு. சிறிசுகள் இஷ்டப்படி விட்டுடனும்-’னு அவன் தாயும் சிபாரிசுக்கு வந்து விடுகிறாள். மக்களுக்கு முதல் சத்துரு மாதா பிதா. வீட்டுக்குப் பெரியவா கையில் கொடுத்து, நமஸ்கரித்து குல தெய்வத்துக்கு இசைந்து முடித்து வைத்து. -அதெல்லாம் எப்பவோ போச்சு. மூட நம்பிக்கை, இளைய தலைமுறை கொக்கரிக்கிறது- இதென்ன புஷ்பம், சந்தனம், ரவிக்கைத் துண்டு, ஏது ஒரே அமர்க்களமாயிருக்கே ஒஹோஹோ, நெய் ஹல்வா, மிக்ஸ்சர்- இந்த அல்வாத் துண்டில் ஒண்னு எடுத்துக் கறேன். பாலாவுக்குத் தெரிய வேண்டாம். தெரிஞ்சால் ரெண்டு பேரையும் கிழிச்சு மாலையாப் போட் டுண்டுடுவா-”