பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு i45

ஏதோ நிழல் அரவம் கேட்டுத் திரும்புகிறேன். என் பின்னால் பாலா, மார்மேல் கைகட்டிக் கொண்டு நிற்கிறாள். புருவங்கள் மின்னல் கொடிகளாய் தெரி கின்றன. காளியாக மாறி விடுவாளோ? முகம் தழல் வீசுகிறது. எனக்குப் பயமாயிருக்கிறது.

எப்பவுமே அவளைக் கண்டால் ஒருவிதப் பயமா யிருக்கிறது. ஏதோ ஒரு அமானுஷத் தன்மை அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லது ஆமை ஒடுபோல் அவள் அதைச் சுமந்து கொண்டிருக்கிறாளோ? ராவணன் தன் கூந்தலைத் தீண்டியதால், தன் கையை வாளாக்கிக் கூந்தலை வெட்டி அக்னி ப்ரவேசம் செய்த வேதவதி போல்.

அக்னி னி.

நல்ல வேளை, ஒன்றும் நேரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவள் நெற்றி மூட்டம் கலைகிறது. வானவில் போல் புன்னகை, மேகங்களைக் கிழித்துக்

கொண்டு. உஸ்-’, என்னை அறியாமலே என் நெற்றி மேல் என் கை போகிறது. நெற்றி கசகசத்திருக்கிறது.

நெஞ்சு முள்ளில் சொல் தாண்டி ஏதோ இடறு கிறது. இங்கு நான் வந்து எத்தனை நாளானாலும் சரி. இங்கு என்னவோ சரியில்லை. ஆனால் சொல்ல வல்லையே! மானேஜரைக் கேட்க தைரியம் இல்லை.ே இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏதோ கதவடைப்பு உணர் கிறேன். எனக்குப் பயமாயிருக்கிறது. ஏதோ பயம், என்ன பயம்?

“தொந்தின்னு பாக்கறியா அம்பி ?” மானேஜர் தன் அடிவயிற்றைத் தடவிக் கொள்கிறார். “இதனுள் இன்னும் வைத்யனுக்கே தெரியாத ஏதேதோ இருக்கிறது.

க-10.