பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5g லா. ச. ரா.

‘அம்பி நாயக்கர் பார்க்க இப்படியிருக்காரேன்னு ஏமாத்துடாதே! இன்னிக் கணக்குக்கு அஞ்சுலகரத்துக்குப் பஞ்சமில்லே. ஆனால் கணக்கு மட்டும் கேட்கப்படாது.”

‘அஞ்சாவது பஞ்சாவது எங்கேங்க? விவசாயி கணக்கு பார்த்தால் பளுதையும் அரிவாளும் நிகரத்தில் மிஞ்சா துன்னு பழமொழி கேட்டதில்லியா? எல்லாம் மண்ணுலே போட்டுட்டு மண்ணிலேருந்து எடுக்கறதுங்கறது லேசுக் காரியமா? பரம்பரையா நடக்கற காரியம். இன்னும் முடிவு காணாத காரியம்!”

நாயக்கரே, நிலத்தில் போட்டதைக் கேக்கல்லே. விதைச்சதையும் கேக்கல்லே, அறுப்பதையும் கேக்கல்லே, புதைச்சதைக் கேக்கறேன் வோய்!”

நாயக்கர் விழுந்து விழுந்து சிரிக்கிறார். புரையேறி மண்டையைத் தட்டிக் கொள்கிறார்.

“வெக்கக் கேடு, நீங்க ஒண்ணு! எப்பவந்தாலும் ஐயாவுக்கு இந்தக் கேள்விதான் போணி!’

‘சளைக்காமல் நீரும் ஒவ்வொரு தடவையும் இதே பதிலைச் சொல்வி, இதே சிரிப்பைச் சிரிச்சு இதே புரையை ஏற்றி இதே மண்டையைத் தட்டிக்கிற Knack ஐ அம்பிக் குக் காட்டனும்னுதான் இ ேத கேள்வியை இப்போ கேக்கறேன்.” .

‘பின்னே நான் யார் மன் டையைத் தட்டுவேனுங்க?” என்ன திகைப்பு, என்ன பணிவு:

‘சபாஷ் நாயக்கரே வாரிட்டீங்க : இந்தத்தடவை இது ஒண்னு புதுசு.’

‘நீங்க ஒண்ணு...ஆமா சின்ன ஐயா...யா...ரோ?” நாசூக்காய் அந்த இழுப்பு...அதுமட்டும் நாலுமாச மேனும் பழகனும்.

மானேஜர் கண் கொட்டாமல், என்னைப் பார்த்துக் கொண்டே, ‘என் அக்கா மகன்.”