பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 154

‘அதானே பார்த்தேன். ஐயா ஜாடையை அப்பிடியே உரிச்சு வெச்சிருக்கேன்னு!”

‘நானும் அதானே கேட்டேன் நாயக்கர்வாள். இந்தத் தடவை கிணறு எங்கானும் பறந்து போகாமல் இருக்கா?”

நாயக்கர் சிரிப்பில் தொண்டையில் வெண்கலம் குலுங்கிற்று. ஆனால் மானேஜர் சிரிக்கவில்லை. நாயக்கர் முகத்தில், சிரிப்பு துடைத் தெறிந்தாற் போல் சட்டென மறைந்தது.

‘இருக்குதுங்க” எட்டிற்றோ எட்டாதோவெனக் குரல் அத்தனை தாழ்வு.

“அப்போ என்னுடைய நல்லகாலம்’ எனக்கு விளங்கவேயில்லை. இது பரிபாஷையில்லை. ஏதோ குகையிருட்டு, பிரம்மாண்டமான துறவு கிணறு. பம்பு செட் ஒடிக் கொண்டிருக்கிறது குபுக் குபுக் குபுக் கிணற்றின் இதயத் துடிப்பு: மோட்டார் ஷெட்டை ஒட்டிக்கட்டிய தொட்டி யில் ஜலம் துரைத்துக் கொண்டு கடைகிறது. தொட்டியி விருந்து கட்டிய சரிவிலிறங்கி, தன் பலத்தை ஒன்று கூட்டிக் கொள்வது போல் ஒரு தேக்கம் கண்டு அதில் கழித்துக் கொண்டு வரப்புகளினிடையே கால்வாய்கள் வழி,பாய்ச்சலின் வீச்சு எங்கெங்கோ போகிறது. சலசலப்பு எங்கிருந்தெல்லாமோ கேட்கிறது. என் திகைப்பு கண்டு நாயக்கர் முகம், பூசணிக் காய் வெடித்தாற் போன்று கீறு காண்கிறது.

‘சின்ன ஐயா கிட்ட சொல்லுதேன். சின்ன ஐயா பாக்குதெல்லாம் பெரிய ஐயா தன் பெரிய மனசுலே கட்டிக் கொடுத்த புண்ணியம்தான்”

‘என்னை ஏன்ய்யா வம்புக் கிளுக்கறே? சரியான கண்டத்திலே என்னை மாட்டி விட்டே மறக்க முடியுமா உன் புண்ணியத்தை?