பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு

இந்த ஏழை கதை ஓயாத கதை. இப்ப நீங்க நடக்கற தூரமாவா இருக்குது? இந்தக் கயித்துக் கட்டில்லே சாஞ்ச மாதிரி அமர்ந்து இளைப்பாறிக்கிட்டிருங்க. சின்ன ஐயாவைச் சுத்திக் காண்பிக்கறேன். கிணத்துக்கு, கிணத்துப் பாசனத்துக்கு அவர் சாகதியம் ஐயாவுக்குப் போதாதா?”

‘அதுவும் சரிதான். அம்பி, நாயக்கரோடு போய் வா. இந்தக் கிணற்றுப் பாய்ச்சல் இதுவரைன்னு எந்த மூலையைக் காண்பித்தாலும் பேசாமல் கே ட் டு க் கொள்வது தவிர நமக்கு வழியில்லே. பிறத்தியான் வயலாயிருந்தாலும் தெரியப் போறதில்லே. ஏதாவது சந்தேகம் கேட்காதே. அவ்வளவுதான் இளநீர் பொக்கற மாதிரி தலையை-’’

நாயக்கர் செவிகளைப் பொத்திக் கொண்டார். ‘ஆண்டவனே! ஆண்டவனே!! எசக்கி, சடுதிலே வத்தியா?”

இளநீர் என்ற சொல்லே மந்திர்ம் போல், இரண்டு கைகளிலும் அரை டஜனை அணைத்த வண்ணம் கத்தியைப் பிடித்தவண்ணம் ஒரு ஆள் தோன்றினான்.

செவ்விளநீர்,

மானேஜர்: “மூலத்துக்கு, வயிற்றுப் புண்ணுக்கு நல்லது; ஆனால் ரத்தத்தில் சர்க்கரைக்கு எமனாச்சே!”

நாயக்கர் * எல்லாம் அங்காளம்மன் மேலே பாரத்தைப் போடுங்க. ஒண்ணும் ஆவாது. சும்மா ஒண்ணு சாப்பிடுங்க.’’

‘பின்னே விட்டா வெக்கப் போறேன்? நல்லா யிருக்கு, இன்னொண்ணு சீவும்!”

நாயக்கர் குந்திட்டு உட்கார்ந்து கொண்டு, பய. பக்தியாய்த் தன் கையாலேயே சீவினார்.