பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு 155

நட்ட நடுவே கிணறு, அதன் கட்டடம் உள்பட மொத்தா காரமாய் ஏதோ ராகrத ப்ராணி உட்கார்ந்திருப்பது போல...

“இங்கே ஏரிப் பாய்ச்சல், ஆத்துப் பாய்ச்சலுக்கு வழியில்லை. விவசாயம் கிணத்தை நம்பித்தான் வாழுது. கிணத்தைத் தோண்டினாலும் தண்ணி கண்டால் வாய்ச்சான் போச்சான். தலையிலே கை வைச்சுக்கிட்ட வனுக்குக் கிணத்துத் தண்ணைக் கடன் கொடுப்போம். வாடிக்கைக்கு விடுவோம். ஈடு கொடுப்போம். அதென்னவோ போங்க. விவசாயமோ வெக்கக் கேடோ? பெண்டாட்டியைக் கட்டிக்கிட்ட மாதிரி, மண்ணைக் கட்டிக்கிட்டு வாழறோம். பானை பிடிச்சவ பாக்கியம். ஐயா பாருங்க, இந்தக் கிணறு இப்பத்தான் அஞ்சு வருசமா குளுகுளுன்னு வவுத்துக்குப் பாயுது. ஐயோ. இது எங்கள் குடும்பத்தைக் காட்டின கோலம் எம்மாம் தெரியுமா? இருவது வருசத்துக்கு முன்னாலே என் பாட்டன் இடம் பார்த்து, பூசை பண்ணி, நூல் பிடிச்சு மண் வெட்டியினால் முதல் வெட்டுப் போட்டு ஆட்டுக்கு வந்தவர் அடுத்த நாள் எளுந்திருக்கல்லே. ஒரு பக்கம் விளுந்திடிச்சு. அப்பவே நாங்க பின் வாங்கறவங்கதான். ஆனால் பாட்டன் விடல்லே. இடம் பாத்தவன் நான். எத்தினியோ கிணறு வெட்டிக் கொடுத்திருக்கேன். இது சொந்தக் கிணறு. அந்த இடத்திலேயே வெட்டி நான் பாத்த சாஸ்த்ரம், பொய்யாவாமே என் பேரை நீங்க நிலைநாட்டணும். அதுக்காச்சு எனக்காச்சு. நான் பலியா னாலும் போறேன். இதெல்லாம் காவு வாங்கிட்டுத்தான் கொடுக்கும். நான் போனால் ஆவாதா?’ ன்னு படுக்கை யிலிருந்து வாக்காவே சொல்லிட்டாரு, கல்பூரத்தை ஏத்தி உள்ளங்கையிலே வெச்சுக்கிட்டு.

‘எடுப்பிலேயே சரியில்லியே ஐயா?"ன்னு என் அப்பனார் கேட்டுது.

‘அப்பிடித்தான் இருக்கட்டும், என்னைக் காவு வாங்கியாச்சுல்லே? விேல்ையைத் தொடர்ந்து ஆவட்டும்'