பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& லா, ச. ரா,

இட்ட என்னென்னவோ பேசறேன் வாயிலே ஏதேதோ வருது. ஆனால் வாயைப் பொத்திக்கிட்டுத்தான் பேக தேன். ஆனால் ஈதெல்லாம் சேர்ந்ததுதான் பயிராளி. ஆனால் பேச்சிலே கிணறுதாண்டி எங்கெங்கோ ரொம்ப துரம் தாண்டி வந்துட்டமில்லே?”

வெய்யிலின் மஞ்சள், மேகங்களின் கறுப்புத்தட்டில் தோய்கையில், பொட்டில் கண்ட ரத்தப் பெருக்குப்போல் கசியும் இந்தத் தங்க மசியில்தான், சரித்திரத்தில் பொன் னால் பொறிக்கப்படும் செய்கைகள் எழுதப் படுமோ? (யாரால்?) பணி. நல்லவேளை, கம்பளி கொண்டு வந்திருக் கிறோம். ஆனால் நான் இங்கு வந்துவிட்டேனே? மானேஜர் டைவரை அழைத்தால் கொணர்ந்து கொடுப் பான். ஆனால் அவருக்குத் தோண்ணுமே!

‘கிணத்து விளிம்பிலே நிக்கிறேன். திடீர்னு ஒரு நெனப்பிலே வயிர் பகீராயிட்டுது, இந்த வாய்திறந்த பூமி, களபலியா என் ஐயா உயிரை வாங்கியாச்சு. பின்னா லேயே ஆயா கல்லு கல்லா பூட்டியிருந்த நகையை முளுங் கியாச்சு. அப்புறம் என் அப்பன், ஆத்தா, என் சம்சாரம் - பொருள் எ ல் லா ம் இ ன் னு ம் இதுலே வராத தண்ணியிலே முளுகியாச்சு. இப்போ நான் இங்கே தனியா நிக்கேன். ஏன் ஏன் நிக்கேன்? நிக்கனும்? இதன் பசி இன்னும் அடங்கல்லே. இனியும் என்ன ஆவப் போவுது? வாழை நாராட்டம் என்னவோ ஒரு திகில் நெஞ்சுலே சுத்தி கிச்சு. தலையைக் கையில் பிடிச்சுக்கிட்டு அங்கேயே குத்திட்டேன். அப்போ ஐயா

“அடே நாதமுனி! நாதமுனி!!”

சுத்து முத்தும் நோக்கறேன். எப்போ இப்பிடி இருண்டு போச்சு?

“இங்கே பாருடா !”