பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gf

ராஜமுழிதான் மிச்சம் வேறெத்தையும் நான் காணல்லே. அம்மாடி!

போனது தான் போனாளே, சேந்தாப்போலே. ஒதுங்கினாளோ ? கோவிந்தாக் கொள்ளியிலும் கொம் மாளமா ? அவள் சிந்தாமணி, அவன் மூணுமைல்தாண்டி ஒரு வாய்க்காக் கரையோரம், அதிலும் ஒருகால் தொடை வரை காணல்லே. முதலைக்கு வேண்டுதலை. கால் வழுக்கியா, ஒருத்தரையொருத்தர் காப்பாத்தப் போயா, இரண்டு கையைப் பி டி ச் சுண் டு ஒரு கு றி ப் பி ல் தற்கொலையா, அல்லது உன்னோடு வாழ்ந்த லக்ஷணம் போதும்னு யார் யாரைப் பிடிச்சால் முன்னால் தள்ளி னதுன்னு யார் கண்டது ? விசாரணை நடத்தக் கூட வழியில்லே. சாகதியா சம்மனா ?”

‘பேச்சென்னவோ சாவிலும் ஒத்துமையைப் பார்னு: ஊர் மெச்சிக்கறது. அதிலேயும் ஒரு நல்ல பேர் கட்டிக்க இந்த மகாத்மியம் இங்கேதான் நடந்தது, இங்கேதான் நடக்கமுடியும்னு சிதை நெருப்பிலே, ஊர் தனக்கு சாம். பிராணி போட்டுக்கறது. ஊர்தான் என்ன ஊரோ ? செத்தவாதான் என்ன மனுஷாளோ ? பிறந்ததுதான் நீ என்ன பிள்ளையோ ?”

இப்படியேதான், சம்பந்தமா சம்பந்தமில்லாமல்: ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட்டு, என் அடிவயிற்றில் அவன் மாட்டித் திருகியிழுக்கும் அலகை, நான் இரண்டு கைகளையும் பிடித்துக் .ெ கா ன் டு தெளிவதைப் பார்க்கையில் அவளுக்குத் தனிக் குஷி.

காமுப் பாட்டி இன்னும் எங்கே உயிரோடு இருக்கப் போகிறாள்? வீறாப்பாய் எழுதியிருக்கிறாளே, காசிக்கு எங்கே போவாள்? புண்ணியம் தனியாகத் தேடுவது அவள் சுபாவத்தில் அல்ல. அந்தக் கெளரவம் அவளுக்குக் கொடுத்து விடனும், அது போகிற போக்கில், வீட்டுக் கொல்லைப் புறத்தை வளைக்கும் வாய்க்காலில் குளிக்கும்