பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவேசப்படவும் முடியுது. அவனே புளைக்கத் தெரியாத வன். அந்த ஒரு பொய்யைச் சொல்லிப் போட்டால் தான் என்ன ?’ கண்ணைச்சிமிட்டுகிறாரா, நிஜமாகத் தான் சொல்கிறாரா ? இ ரு ட் டி ல் தெரியவில்லையே. *ஆனால் அப்புறம் நமக்குக்கதை கிடைச்சிருக்காது; எல்லாருமே அரிச்சந்திரனாயிருந்துட்டா எப்பிடி ? இந்த நியாயம் ஐயாவுக்கு-எல்லாம் தெரிஞ்சவர் - படல்லே? இதைச் சின்ன ஐயாகிட்ட மட்டும்தான் சொல்விக்க முடியும்னு சொல்லிக்கிறேன், ஐயாகிட்ட மூச்சு விட்டுடா திங்க. சரி, திரும்புவோமா ?”

தாயக்கரே, நீங்கள் செய்த காரியம் ஜரிக்க, நீங்கள் இன்னேரம் சொல்லி வந்த கதையையும் உங்கள் கண்ணி ரையும் நான் நம்பனுமா ? கதையை இத்தனை சுவாரஸ் யமா சொல்பவர் குறைச்சல்தான். அதற்கு உங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கவேண்டியதுதான். ஒன்றுதெரிகிறது ஆளுக்கு ஆள் எத்தனை நாடகம், நடிப்பு, இந்தக்கதை யைக் கேட்கத் தெரிந்தே உங்களுடன் என்னை அனுப்பிய மானேஜரும் நாடகம் நடத்தக் காட்டுகிறார். நெல்லி லிருந்து உமியைப் பிரிக்க எனக்கு எவ்வளவு சக்தியிருக் கிறது என்று தனக்குள் சோதித்துப்பார்த்துத் தனக்குள் சிரித்துக் கொள்கிறாரா ? அவருடைய அகண்ட கருணை யில், என்படிப்பினையில் இ ப் டி யும் ஒரு பாடம் ஊட்டுகிறாரா?

வந்தவர் போனவரிடம், சொன்னகதையை சொல்லிச் சொல்லி, நாயக்கரே, உங்களை அறியாமலே அதில் மெருகேறி, உங்களுக்கே உங்கள் நிஜம், பொய்யின் கலவை மறந்து, உங்கள் வார்த்தையில் உங்களுக்கு அத்தனை நம்பிக்கை ஏறிவிட்டது. நீங்கள் சொல்வதை நீங்க .ே ள அ ப் படி யே அப்பட்டமாக நம்பு கிறீர்கள். சாஸ்திரமே புதிதாக அமைத்துப் பார்க்கிறீர். அது செல்லுகிறதா என்று என்னிடம் ஒதிப்பார்க்கிறீர். ஆனால் உங்களுடன் தர்க்கிக்க எனக்கு என்ன தகுதி