பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 . & qrr•

யிருக்கிறது ? மானேஜர் சி ற க ைண ப் பி ல் நான் ஒருகுஞ்சு.

டாக்ஸி உள் மங்கிய வெளிச்சத்தில் மானேஜர் புன்முறுவலை உணர்கிறேன். அதில்தான் எத்தனை அர்த்தம், நாயக்கர் என்ன பேசினார் என்று கேட்க மாட்டீர்கள். வீட்டுக்குப் போன பிறகும் கேட்க மாட்டீர் கள். ஆனால் நாயக்கர் பேசினது அத்தனையும், நீங்கள் பார்க்காமலே கேட்காமலே உங்களுக்கு அற்றுபடி. உங்கள் விசேஷமே அதுதான்.

ஆண்டவனே. சிலருக்குக் கதை சொல்லும் வரத்தை வழங்கியிருக்கிறாய். அ த ற்கு சாகதியாக நிமிடத்துக்கு நிமிடம் நாதமுனி நாயக்கர் உங்களை அழைக்கிறார். நம்பினோர்க்கு நடராஜா, நம்பாதவருக்கு எமராஜா, ஆண்டவனே, நீ யார் பக்கம் ? இல்லை நாயக்கர் நூற்கும் கூட்டில் நீயும் சிக்கிவிட்டாயா ?

டாக்சி, நாயக்கர் வீட்டு வாசலில் நிற்கிறது. நாயக்கர் இறங்கிக் கொண்டு, கைகூப்பி எங்களை உள்ளே அழைக்கிறார். -

“ஐயா வாங்க வாங்க “ ஒரு ஆட்டுக்கல் உள்ளிருந்து எங்களை நோக்கி அசைந்து வருகிறது.

கொளந்தே ஐயா நீங்களும் வாங்க.” ரவிக்கையில்லை. அவள் பூட்டியிருக்கும் நகைகளைப் பார்க்கையிலேயே எனக்குக் கழுத்து கனக்கிறது. தோடு தொங்கும் இழுப்பில் காது எப்போ அறுந்து கொள் திறதோ ?

கூடத்தில் கட்டில் மேல் குவிந்திருந்த துணிகளை அவசரமாக ஒதுக்கி நாயக்கர் எங்களுக்கு இடம் பண்ணு கிறார். என்னை அறியாமலே என் முக்கு நுனி தராசு முள் போல் நிலை கொள்ளாது என்னவோ அசைகிற