பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுகு J6

மாதிரி பண்ணுகிறது. கூடம் பூரா. அப்படி ஒரு நெய் மனம். நெய்யோடு சேர்ந்த தேங்காய் எண்ணெயின் ‘கம்’.

இரண்டு கைகளிலும் இரண்டு தட்டுக்களில்-சூடாக இரண்டிரண்டு தேன் குழலுடன் நாயக்கர் மனைவி சமையலறையிலிருந்து வருகிறாள். .ெ ச வ க் க, என் இஷ்டத்துக்கு எடுக்க அவளுக்கு எப்படித் தெரியாமலே தெரிந்தது : மானேஜர் அதைப் பார்த்ததும் நாக்கு ஊறலை இழுத்து உறிஞ்சிக் கொள்கிறார்.

‘இதெல்லாம் எனக்கு ஆவாதப்பா ! பையனுக்குக் கொடு. ’

‘வீட்டுப் பச்சரிசிலே சுட்டதுங்க- அத்தினியும் வீட்டு வெண்ணெய்ங்க. ஒண்ணும் செய்யாதுங்க “ கெஞ்சு கிறாள். ஊட்டாத குறைதான். ‘கொனந்தை ஐயா நீங்களும் சாப்பிடு கண்ணு !” அவசர அவசரமாய் உள்ளே போய் இரண்டு அதிரஸங்களைக் கொணர்ந்து ஆளுக்கு ஒன்று வைக்கிறாள். ஆனையடி அதிர்சம். அதன்மேல் விழுது நெய்வேறு.

“ஐயாமாரே, சும்மா சாப்பிடுங்க. ஒண்னும் ஆவாதுகொளந்தே ஐயா முவம் ஏன் சவுங்குது ?’ பதறிப் போகிறாள். ஏதாச்சும் தப்பாப் பேசிட்டேனா ?”

மானேஜர் என்னைப் பார்த்துப் புன்னகை புரிகிறார். ஸார், நீங்கள் தகப்பன் கருணை- இவள் தாய்க் கருணை. இருவருமே கருணையினாலேயே ஏன் இப்படி என்னை வின்தக்கிறீர்கள் ?

“ஒண்ணுமில்லை- ஒண்ணுமில்லை.” கோபத்துடன் மூக்கை உறிஞ்சிக் கொள்கிறேன். அவள் திகைத்து நிற்கிறாள். என் கலவரத்தை சமாளிக்கத் தலை குனிந்து அதிரஸத்தைப் பிடுகிறேன்.

பற்களிடையில் அதிரஸவிள்ளல் அதுங்கியதுமே தேன் விடுகிறது. பாகு அத்தனைப் பக்குவம்.