பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.56 aff , & . g T .

“அம்பி, வீட்டில் வத்தி வைக்காதே. வாழ்க்கையே இப்படித்தான், விசுவாமித்ர தபஸ் மாதிரி. கற்பு எப்படி யெல்லாம் அழிகிறது ! நெஞ்சில் அவள் காலடிச் சத்தம் கேட்கும் பயத்தில் அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக் கொள்கிறார். சரியாகக் கடித்து, ருசித்து விழுங்க அவருக்கு :ண்ணத்தில் கூட நேரமில்லை. எல்லாம் இருந்தும் திருட்டு வாழ்க்கையாப் போச்சு. ஸார் நிலை மையை ஒரொரு சமயம் நினைத்துப் பார்த்தால் வயிறு ஒட்டிக் கொள்கிறது. திடீரென்று காணாமல் போய் விட்ட நாயக்கர், தோளில் அணைகயிறும் கையில் குவளையுமாக புழைக்கடையிலிருந்து வருகிறார்.

‘பசும் பாலுங்க, ஒண்னும் செய்யாதுங்க !”

‘மதுர மதுர கrரா பானமு”. இதென்ன என்னிலிருந்து எனக்கு மட்டும் வாக்கியம் பீம்ப்ளாஸ் ராகமெட்டில் கேட்கிறது ? (கோமுவுடன் சகவாச ப்ரஸ்ாதம் ?)

மானேஜர் பாலை அருந்திக் கொண்டே, ‘உனக் கென்ன எதுவுமே ஒண்னும் செய்யாது. தேன் குழலும் பாலும் வயிற்றில் கடபுடாவுக்குச் சரியான காம்பி னேஷன்.”

பாவம், மூணு நாள் அவள்தைப்பட்டார். ஒரு நாள் ஆபிஸுக்கு வரமுடியவில்லை.

பாலாவின் கண்கள் என்மேல் சினம் கக்குகின்றன. நான் என்ன செய்ய?

எல்லாருக்கும் எப்பவும் எதற்கும் ஒரே Safetey valve.

“'என்ன செய்ய ?”

to o o

நாயக்கரே, பேசாமல் என்னை தத்து எடுத்துக்

கொள்ளு மேன்!