பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&(op.3, g

போது, அந்த நாளில் வாய் வார்த்தையாக கங்கள் யமுனா, சரஸ்வதி, நர்மதா, அகண்ட காவேரி, அரிஹி” என்று எல்லோரையும் போல் தானும் வரவழைப்பாளே அப்போது என்றேனும் ஒரு நாள், அவளுக்கு இரங்கியோ அவள் வாய்க்கு அஞ்சியோ, கங்கை வாய்க்காலில் பொங்கி, அவளைக் கடமையாக காசிக்கு அழைத்துக் கொண்டு போக அவளுக்கும் வேளை வந்திருந்தால் உண்டு.

சரி சரி மனசுக்குள் இதென்ன 70 mm எத்தனை நாழி? ஆனால் எத்தனையோ கடிதங்களை நினைப்புக்குக் கொண்டு வருகையில், அவள் கடிதம் தானாவே வந்து அத்துடன் காட்சிகள் வருகின்றன, போகின்றன, வதைக் கின்றன.

{} {}

ஊரின் எல்லை தாண்டாமல், இளமையிலே தன் வாழ்வின் குலைவின் உடல், உள்ளக் கூறின் வேதனை களை சமுதாயத்தின்மீது பின் எப்படித்தான் பழி. தீர்த்துக் கொள்வது? அனாதைப் பையன் நான்தான் அகப்பட்டுக் கொண்டேன். (அட பயலே, கால் வேறு கைவேறா தனித்தனியாகக் கடந்தவனை ஒண்ணாச் சேர்த்து அள்ளிப் போட்டுண்டுன்னா வந்தேன், உடம்பு. ஒண்ணுங் காலுமா ஒட்டிக்குமான்னு தவிக்கற போதே இத்தனை திமிரா?) என்னையும் என் பெற்றோர் வழி போகட்டுமே என்று கைவிட்டிருந்தால் தான் என்ன? விடவில்லை, விடமாட்டாள். அவள் கோபங்களுக்கு வடிகால்தான் பின் எப்படி? அப்பா, ஒரு தடவை அவள் பிடுங்கல் தாங்காமல், வீட்டை விட்டு ஓடி விட்டேன். காரணத்தை நினைத்துக் கொண்டால் இப்பக்கூட வெட்கமாயிருக்கிறது.

திடீரென்று நி ைன த் து க் கொண்டாள். ‘நீ எண்ணெய் தேச்சுண்டு எந்த யுகம் ஆறது? இன்னிக்குப்